தமிழகத்தில் பணக்கார வேட்பாளர்கள் பட்டியல்… டாப் 10- இல் இருப்பது யார் யார் தெரியுமா?
Tamil Nadu Top 10 Candidates With Most Assets: தமிழகத்தில் அதிக சொத்துக்கள் உடைய முதல் 10 வேட்பாளர்கள் யார். இவர்களில் கோடீஸ்வர வேட்பாளர்கள் யார். அவர்களில் யார் மீது தீவிர கிரிமினல் வழக்கு உள்ளது என்பன விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேசிய மற்றும் அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் என 4,618 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இவர்களில், அதிக சொத்து உடைய முதல் 10 வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான அமைப்பானது தேசிய கட்சிகளை சேர்ந்த 184 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள், மாநிலக் கட்சிகளை சேர்ந்த 637 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் 979 வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 2,192 பேரின் வேட்பு மனுக்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. இதில், அதிக சொத்துக்கள் உடைய முதல் 10 இடங்களில் எந்தக் கட்சிகளின் வேட்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர் என்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மேலும் படிக்க: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக களமிறகும் முதல்வர் சந்திரபாபு நாயுடு.. இரண்டு நாள் பயணத்திட்டம் என்ன?
- லீமா ரோஸ் மார்ட்டின் (அதிமுக) – சொத்து மதிப்பு: ரூ.5,863 கோடி. ( லால்குடி தொகுதி).
- ஜோசப் விஜய் ( தவெக) – சொத்து மதிப்பு ரூ.648 கோடி. ( பெரம்பூர்- திருச்சி கிழக்கு தொகுதி).
- ஆதவ் அர்ஜுனா ( தவெக) – சொத்து மதிப்பு ரூ 534 கோடி. ( வில்லிவாக்கம் தொகுதி).
- இசக்கி சுப்பையா ( அதிமுக) – சொத்து மதிப்பு ரூ.419 கோடி. ( அம்பாசமுத்திரம் தொகுதி).
- கார்த்திக் மோகன் ( திமுக) – சொத்து மதிப்பு ரூ.346 கோடி. ( வில்லிவாக்கம் தொகுதி).
- மதியழகன் ( திமுக) – சொத்து மதிப்பு ரூ.304 கோடி. ( பர்கூர் தொகுதி).
- ராஜேந்திரன் ( திமுக) – சொத்து மதிப்பு ரூ.259 கோடி. ( திருவள்ளூர் தொகுதி).
- கே. ஆர். ஜெயராம் ( அதிமுக) சொத்து மதிப்பு: ரூ.172 கோடி. ( சிங்காநல்லூர் தொகுதி).
- நித்தியானந்தம் (கொமதேக) சொத்து மதிப்பு- ரூ 170 கோடி. ( பொள்ளாச்சி தொகுதி).
- ஆர். எஸ். முருகன் (தவெக) சொத்து மதிப்பு ரூ.158 கோடி. ( திருநெல்வேலி தொகுதி). ஆகியோர் அதிக சொத்துகளுடன் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.
கோடீஸ்வர வேட்பாளர்கள் யார்.. யார்..?
திராவிட முன்னேற்றக் கழகத்தில் – 170 பேர், அதிமுகவில் 160 பேர், தமிழக வெற்றி கழகத்தில் 156 பேர், காங்கிரஸ் கட்சியில் 27 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இதில், ரூ.10 லட்சத்துக்கு கீழ் சொத்து வைத்துள்ளவர்கள் 1371 பேரும், ரூ.10 லட்சம் முதல் 50 லட்சம் வரை 1,204 பேரும், ரூ. 50 லட்சம் முதல் 2 கோடி வரை 716 பேரும், ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை 286 பேரும், ரூ.5 கோடிக்கு மேல் 415 பெரும் சொத்து வைத்துள்ளனர். தேசிய கட்சிகளில் 61 பேர், மாநில கட்சிகளில் 435 பேர், பதிவு செய்யப்பட்ட கட்சிகளில் 304 பேர், சுயேச்சை வேட்பாளர்களின் 181 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.




தீவிர கிரிமினல் வழக்கு உள்ள வேட்பாளர்கள்
இவர்களில் தேசிய கட்சியை சேர்ந்த 14 வேட்பாளர்கள், மாநிலக் கட்சிகளை சேர்ந்த 138 வேட்பாளர்கள், பதிவு செய்யப்பட்ட கட்சிகளை சேர்ந்த 148 வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் 103 பேர் மீது தீவிர வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.
மேலும் படிக்க: வாக்காளர் அடையாளத்தில் சந்தேகம் உள்ளதா? ரூ.2 சேலஞ்ச் கட்டணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?