AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாக்காளர் அடையாளத்தில் சந்தேகம் உள்ளதா? ரூ.2 சேலஞ்ச் கட்டணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Tamil Nadu Election Challenge Fee: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வரும் வாக்காளர்களின் அடையாளத்தில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அது தொடர்பாக முகவரிடம் ரூ. 2 சேலஞ்ச் கட்டணம் செலுத்தி ரசீதை பெற்றுக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் அடையாளத்தில் சந்தேகம் உள்ளதா? ரூ.2 சேலஞ்ச் கட்டணம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
வாக்காளர் அடையாளத்தில் சந்தேகம். ரூ.2 சேலஞ்ச் கட்டணம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 20 Apr 2026 08:15 AM IST

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரு நாட்களே உள்ளன. இதனால் தேர்தல் களம் முன்பு இருந்ததை விட வேகமாக சூடு பிடித்துள்ளது. வாக்குப்பதிவு நாளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில், வாக்களிக்க வரும் வாக்காளர்கள் அடையாளத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் சேலஞ்ச் ஓட்டு குறித்து தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பல்வேறு விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், ஒன்றாக வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வரும் வாக்காளர்கள் ஒருவரின் அடையாளம் பற்றி ஏதேனும் வாக்குச்சாவடி முகவருக்கு ஆட்சேபனை இருந்தால், அவரிடம் ரூ.2 சேலஞ்ச் கட்டணம் பெற வேண்டும். அதற்கான ரசீதையும் வழங்க வேண்டும். பின்னர், வாக்காளர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வாக்குச்சாவடி முகவர் அளித்த ஆட்சேபனை தவறு எனும் பட்சத்தில் வாக்காளரை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

தேர்தல் முகவரிடம் ரூ.2 சேலஞ்ச் கட்டணம்

இதற்காக, வாக்குச்சாவடி முகவரிடம் இருந்து பெறப்பட்ட ரூ.2 சேலஞ்ச் கட்டணத்தை திரும்ப வழங்கக் கூடாது. ஒருவேளை, வாக்காளர் குறித்த ஆட்சேபனை உறுதி செய்யப்பட்டால், ரூ.2 சேலஞ்ச் கட்டணத்தை முகவரிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்க வேண்டும். பின்னர், போலி வாக்காளரை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் நாளில் ஓட்டு போட வரும் வாக்காளர் ஒருவரின் தோற்றம் உள்ளிட்டவற்றில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதாவது வாக்காளர் ஒருவர் 18 வயது குறைந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்ப, ட்டால் அந்த வாக்காளரிடம் (டிக்ளரேஷன் அபவுட் ஏஜ்) இணைப்பு -7 என்ற படிவத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டு வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்.

மேலும் படிக்க:                 சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று விஜய் பிரச்சாரம்.. முழு விவரம் உள்ளே..

வாக்குப்பதிவு ரகசியம் குறித்த அறிவுறுத்தல்

தேர்தல் நாளில் வாக்குப்பதிவு துவங்குவதற்கு முன்பு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் 1951- ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு, 128- இன் கீழ் வாக்குப் பதிவின் ரகசியத்தை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்குள் விரல் அல்லது அங்க அசைவுகள் மூலம் குறிப்பிட்ட சின்னங்களுக்கு ஆதரவாக வாக்களிக்க தூண்டும் வகையில் அரசியல் கட்சிகளின் முகவர்களோ அல்லது மற்றவர்களோ செயல்படக்கூடாது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படுத்த கூடாது

இதே போல, வாக்களித்தவர்களும் இதுபோன்று இந்தக் கட்சிக்கு தான், இந்த வேட்பாளருக்கு தான் வாக்களித்தேன் என்பதை வெளிப்படையாகவோ, சைகை மொழியிலோ தெரியப்படுத்தக் கூடாது என்று தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக களமிறகும் முதல்வர் சந்திரபாபு நாயுடு.. இரண்டு நாள் பயணத்திட்டம் என்ன?

Follow Us