Voter ID இல்லையா? கவலையை விடுங்க.. இந்த லிஸ்ட்ல ஒன்னு இருந்தா போதும்.. என்ன அது!
Documents Required To Vote: தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இன்றி அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய 12 வகையான அடையாள ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்திக் கொள்ளலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் ஜனநாயக திருவிழா என்ற பெயரில் கொண்டாட உள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் சுமார் 19,000- த்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், அதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என சுமார் 4,618 பேர் வேட்பாளர்களாக களம் காண உள்ளனர். இந்த நிலையில், தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக அனைத்து வாக்காளர்களுக்கும் தேர்தல் ஆணையம் சார்பில் வாக்காளர் பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, வாக்குப்பதிவு நாளில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் வாக்களிக்க முடியுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. ஆம், வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் நாம் வாக்களிக்க முடியும். அதற்கு, தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள கீழ்கண்ட அரசின் புகைப்பட அடையாள ஆவணங்களை பயன்படுத்தி தங்களது வாக்குகளை செலுத்தலாம். அது என்னவெனில்,
மேலும் படிக்க: ராகுல் காந்தியின் தமிழக வருகை.. ஸ்டாலினுக்காக அல்ல.. பாஜகவுக்காக.. அண்ணாமலை அதிரடி.
- ஆதார் அடையாள அட்டை.
- ரேஷன் அட்டை.
- எம். என். ஆர். இ. ஜி. ஏ. அடையாள அட்டை.
- வங்கி அல்லது அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகம்.
- மருத்துவ காப்பீட்டு அட்டை.
- ஓட்டுனர் உரிமம்.
- பான் கார்டு.
- பாஸ்போர்ட்.
- ஓய்வூதிய அடையாள அட்டை.
- ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் பப்ளிக் செட்டார் யூனிட் அடையாள அட்டை.
- எம். பி. மற்றும் எம். எல். ஏ. அடையாள அட்டை.
- மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை.
சந்தேகங்களுக்கு 1950- என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
ஆகிய ஆவணங்களை பயன்படுத்தி தங்களது வாக்குகளை தவறாது செலுத்திக் கொள்ளலாம். அத்துடன் சமீபத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருப்பது கட்டாயமாகும். இது தொடர்பான வேறு ஏதேனும் சந்தேகங்களுக்கு 1950- என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். தமிழக சட்டமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு
அந்த வகையில், வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யாமல் இருந்து விடக்கூடாது என்பதற்காக வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் போனாலும், அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகளை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. இது வாக்காளர்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்..