முதல்வர் விஜய்யை பார்க்கணும்… 2000 கி.மீ நடந்தே வந்த உ.பி. இளைஞர் – வைரலாகும் வீடியோ
முதல்வர் விஜய்யை நேரில் காண்பதற்காக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அமன் என்ற இளைஞர் கடந்த ஜூலை 3, 2026 அன்று நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 2000 கி.மீ நடந்து வந்த அவர் 25 நாட்களுக்கு பிறகு ஜூலை 29, 2026 இன்று சென்னை வந்துள்ளார்.
சென்னை, ஜூலை 29 : உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகர் என்ற பகுதியை சேர்ந்தவர் அமன். இவர் தமிழக முதல்வர் விஜய்யின் செயல்களால் ஈர்க்கப்பட்டு அவரது தீவிர ரசிகராக மாறியுள்ளார். இந்த நிலையில் முதல்வர் விஜய்யை நேரில் காண்பதற்காக உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஜூலை 3, 2026 அன்று நடைபயணத்தை தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 2000 கி.மீ நடந்து வந்த அவர் 25 நாட்களுக்கு பிறகு சென்னை வந்துள்ளார்.
முதல்வர் விஜய்யை பார்க்க 2000 கி.மீ நடந்தே வந்த உ.பி. இளைஞர்
இந்த நிலையில் சென்னை வந்த அவர் முதல்வர் விஜய்யை சந்திப்பதற்காக ஜூலை 28, 2026 அன்று தலைமை செயலகம் வந்துள்ளார். இருப்பினும் அவர் முதல்வரை சந்திப்பதற்கு காவல்துறையினர் அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக நிரூபர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் மக்கள் நலன் சார்ந்த ஆட்சிக்காக முதல்வர் விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க நடைபயணமாக வந்துள்ளேன். மேலும், பலர் தனது பயணத்தின் நோக்கம் குறித்து கேட்டறிந்தனர்.




இதையும் படிக்க : கொளத்தூர் தோல்வி… மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு – என்ன நடக்கும்?
வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ
View this post on Instagram
தேசப்பற்றை வலியுறுத்தும் விதமாக தேசியக் கொடியுடன் பயணம் செய்தேன். முதல்வர் விஜய் தேசிய அரசியலில் பங்காற்ற வேண்டும். அவரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்”என்றார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகரில் இருந்து நடக்க தொடங்கிய அமன் கடந்த 25 நாட்களாக நடைப்பயணம் மேற்கொண்டு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களை கடந்து தற்போது சென்னை வந்தடைந்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட 2700 கி.மீட்டருக்கும் அதிகமாக நடந்து வந்திருக்கிறார்.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், கல்வி, குழந்தைகள் நலன் மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை சிறப்பாக வழிநடத்தக்கூடிய அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. வடஇந்தியாவிலும் அவருக்கு 90 சதவிகிதம் ரசிகர்கள் உள்ளனர். அதனால் அவர் இந்தியாவின் பிரதமராக வேண்டும் என்பதே என் விருப்பம். சென்னை வந்து ஒரு நாளுக்கும் மேலாகிவிட்டது. விஜய்யைச் சந்திக்க மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். மேலும் அவரது நீலாங்கரை இல்லம், பனையூர் அலுவலகத்திற்கும் சென்றேன்.
இதையும் படிக்க : “பாஜகவின் வீழ்ச்சிக்கு Gen-Z புரட்சியே தொடக்கப்புள்ளி!”.. NTA-வை உடனடியாகக் கலைக்க திருமாவளவன் வலியுறுத்தல்!!
ஆனால், இதுவரை அவரை சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்த செய்தி விஜய்யின் கவனத்துக்கு சென்று, அவர் என்னை நேரில் சந்திப்பார் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன். முதலமைச்சர் விஜய்யை பார்க்காமல் நான் சென்னையை விட்டு செல்லமாட்டேன் என்றார். இந்த நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் வீடியோ சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.