AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொளத்தூர் தோல்வி… மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு – என்ன நடக்கும்?

கொளத்தூர் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திடம் அவர் புகார் மனு அளித்திருந்தார். அதன்படி கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

கொளத்தூர் தோல்வி… மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு – என்ன நடக்கும்?
மு.க.ஸ்டாலின் - வி.எஸ்.பாபு
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Jul 2026 07:40 AM IST

சென்னை, ஜூலை 29 : கடந்த 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் போட்டியிட்டு அதிர்ச்சி தோல்வியடைந்தார். இது திமுகவினர் மட்டுமல்லாமல் பொதுமக்களிடையேயும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திமுக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு என்பவரிடம் சுமார் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று 14 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

கடந்த 2011, 2016 மற்றும் 2021 என தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் கொளத்தூர் அவரது கோட்டையாக பார்க்கப்பட்டது. இதனால் அவர் இந்த முறையும் அவர் வெற்றி பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் தோல்வியை சந்தித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படிக்க : தமிழ்நாட்டின் உரிமையை முதலமைச்சர் அடகு வைத்துள்ளார்.. மேகதாது விவகாரத்தில் முதல்வரை சாடிய உதயநிதி ஸ்டாலின்…

இந்த நிலையில் கொளத்தூர் தொகுதியில் உள்ள சில வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக கூறி தேர்தல் ஆணையத்திடம் அவர் புகார் மனு அளித்திருந்தார். அதன்படி கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக செல்யபடுத்தப்பட்டதா என ஆய்வு செய்யப்பட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இதனையடுத்து அவரது கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டு ஆய்வுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் ஜூலை 29, 2026 இன்று காலை 9 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள அந்த 14 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படவுள்ளன. இதில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களது அங்கீகாரம் பெற்ற முகவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ன  நடக்கும்?

இந்த ஆய்வில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதன்படி முறையாக செயல்படவில்லை என்றால் தொழில்நுட்பக் கோளாறு உறுதி செய்யப்படும். இதனையடுத்து தனை அடிப்படையாகக் கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கான விண்ணப்பத்தையும் ஸ்டாலின் தாக்கல் செய்துள்ளார். தற்போது இந்த ஆய்வு அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிக்க : தவறான விஷயம்… தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

கொளத்தூரில் மு.க.ஸ்டாலினின் தோல்வியை வைத்து தவெகவினர் விமர்சித்து வந்தனர்.  இந்த நிலையில் 14 வாக்குப்பதிவு இயந்திரங்களில் இன்று நடைபெறவிருக்கும் ஆய்வு அரசியல் ரீதியாக மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.  மற்றொரு பக்கம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்று மீண்டும் எதிர்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தை பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow Us