எனது கூட்டத்தில் தவெகவினரே விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கின்றனர் – ஈபிஎஸ்!
Edappadi Palanisamy About TVK Members | தனது கூட்டத்தில் தவெகவினரே விருப்பப்பட்டு தனக்கு வரவேற்பு கொடுக்கின்றனர் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சேலம், அக்டோபர் 12 : எனது கூட்டத்தில் தவெகவினரே (TVK – Tamilaga Vetri Kazhagam) விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கின்றனர் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK – All India Anna Dravida Munnetra Kazhagam) பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி திராவிட முன்னேற்ற கழக (DMK – Dravida Munnetra Kazhagam) கூட்டணி கட்சிகள் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த நிலையில், செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு என்ன தகுதி இருக்கிறது – ஈபிஎஸ்
அதிமுகம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (அக்டோபர் 12, 2025) சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிக இடம், ஆட்சியில் பங்கு என திமுக கூட்டணி கட்சிகள் கேட்க தொடங்கிவிட்டன. இதனால் திமுக கூட்டணியில் விரிசல் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு எங்கள் கூட்டணியை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Kalaimamani Awards: தமிழக அரசின் கலைமாமணி விருது… முதலமைச்சரிடம் விருதை பெற்ற திரைப்பிரபலங்கள்!




தவெகவினரே விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கின்றனர் – ஈபிஎஸ்
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, எனது கூட்டத்தில் தவெகவினரே விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கின்றனர். கட்சி தலைமையின் அனுமதி பெற்று வர தவெகவினருக்கு அறிவுறுத்தியுள்ளோம். தவெகவினர் வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தேவையற்ற விமர்சனங்கள் செய்கின்றனர் என்று அவர் கூறியுள்ளார். மேலும் டிடிவி தினகரன் நடத்துவதெல்லாம் ஒரு கட்சியா என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, யாரும் அவரை ஆதரிக்காதததால் அதிமுகவுடன் தவெக கூட்டணி சேர்ந்துவிட்டால் பாஜகவை ஈபிஎஸ் கழட்டி விட்டுவிடுவார் என பேசுகிறார் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : Sellur Raju: எங்கள் கட்சி கொடியவே அதிமுக காரங்க தூக்க மாட்டாங்க.. ஜாலியாக பேசிய செல்லூர் ராஜூ!
காவிரி உபரி நீரைக் கொண்டு 100 ஏரிகள் நிரம்பும் திட்டத்தின் மூலம் இதுவரை 56 ஏரிகள் மட்டுமே நிரப்பட்டுள்ளது. 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மீதமுள்ள ஏரிகளை நிரப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.