Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘அப்பாவுக்கு ஏதாச்சி ஆனால் தொலைச்சிடுவேன்’ காட்டமாக சொன்ன அன்புமணி!

Anbumani Ramadoss : 2025 அக்டோபர் 5ஆம் தேதி இருதய பிரச்னை காரணமாக பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, யார் யாரோ ராமதாஸை சந்தித்ததாகவும், ராமதாஸ் அய்யாவுக்கு எதாச்சு ஆனால் தொலைச்சிடுவேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக பேசியுள்ளார்.

‘அப்பாவுக்கு ஏதாச்சி ஆனால் தொலைச்சிடுவேன்’ காட்டமாக சொன்ன அன்புமணி!
அன்புமணி ராமதாஸ்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Oct 2025 16:26 PM IST

கிருஷ்ணகிரி, அக்டோபர் 10 : ராமதாஸ் அய்யாவுக்கு எதாச்சு ஆனால் தொலைச்சிடுவேன் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக பேசியுள்ளார். மேலும், ராமதாஸ் அய்யா என கண்காட்சியா என்றும் அய்யாவை வைத்து டிராமா பண்ணிட்டு இருக்கீறார்கள் என அன்புமணி தெரிவித்துள்ளார். பாமகவில் உட்கட்சி பிரச்னை நிலவி வருகிறது. தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. நானே கட்சிக்கு தலைவர், நிறுவனர் என ராமதாஸ் கூறி வந்த நிலையில், ஒரு கட்டத்தில் அன்புமணியின் கட்சி பொறுப்பை பறித்தார். ஆனால், அன்புமணி கட்சி தலைவராக தொடர்வார் என தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி இருந்தது. இப்படியான சூழலில், 2025 அக்டோபர் 5ஆம் தேதி பாமக நிறுவனர் ராமதாஸ் இதய பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சை முடிவில் ராமதாஸுக்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும், இதயம் நன்கு செயல்படுகிறது என தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராமதாஸை முதல்வர் ஸ்டாலின், கமல்ஹாசன், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணியும் அவரை சந்தித்தார்.  மருத்துவமனையில் அவருடன் ஜி.கே. மணி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர். 

Also Read : ‘ராமதாஸுக்கு அதிகாரம் இல்லை’ அன்புமணி நீக்கம் குறித்து வழக்கறிஞர் பாலு பேச்சு

‘அப்பாவுக்கு ஏதாச்சி ஆனால் தொலைச்சிடுவேன்’

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் காட்டமாக பேசியுள்ளார். கிருஷ்ணகிரியில் பேசிய அன்புமணி ராமதாஸ், “ராமதாஸ் தற்போது நல்ல உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார். அவருக்கு மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனைக்காக தான் சென்றிருக்கிறார். பரிசோதனை முடிந்து தற்போது நலமாக இருக்கிறார். இது ஏற்கனவே திட்டமிட்ட பரிசோதனை.

பரிசோதனை வைத்துக் கொண்டு ராமதாஸ் அய்யாவுக்கு உடல்நிலை சரியில்லை என சிலர் போன்மேல் போன் போட்டு பேசினர். இதெல்லாம் அசிங்கமாக இருக்கும். வந்து பாருங்கள் என சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். யார் யாரோ அவரை பார்த்துக் கொண்டு போய் இருக்கிறார்கள். ராமதாஸ் அய்யா என கண்காட்சியா? நான் இருக்கும் போது யாரும் வரமாட்டார்கள்.

Also Read : அன்புமணிக்கு கொடுத்த கெடு.. கட்சிவிரோத நடவடிக்கை எடுக்கும் ராமதாஸ்?

அய்யா பாதுகாப்பு கருதி நான் யாரையும் விடமாட்டேன். ஆனால், இப்போது, கதவை தட்டி நேரமாக சென்று அய்யாவை தூங்க விடவில்லை. என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? ராமதாஸ் அய்யாவுக்கு எதாவது ஒன்று ஆனால் தொலைச்சிடுவேன். சும்மா விடமாட்டேன். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். அய்யாவை வைத்து டிராமா செய்து, நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்” என்று கூறினார்.