அமைச்சருக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம் என சொன்ன அன்புமணி.. காட்டமாக பதில் கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ்.. நடந்தது என்ன?
செப்டம்பர் 30, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மேற்கொண்ட கரூர் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, “வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் […]

செப்டம்பர் 30, 2025: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மேற்கொண்ட கரூர் பரப்புரையின் போது கூட்ட நெரிசல் காரணமாக 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமைச்சர் அன்பில் மகேஷ் குறித்து விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, “வளர்த்து ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என கருதுகிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழப்பு:
கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 27, 2025 அன்று தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இரவு 7 மணியளவில் பரப்புரை நடைபெறும் இடத்திற்கு வந்த அவர், பல்வேறு விஷயங்கள் குறித்து மக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர் அங்கு கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது. தற்போது வரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 50-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்… கரூர் மாவட்ட செயலாளர் கைது
அமைச்சருக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் – அன்புமணி:
இத்தகைய சூழலில், இந்த சம்பவம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “கரூர் துயர சம்பவத்தை வைத்து இவர்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு அமைச்சர் தேம்பித் தேம்பி அழுகிறார். அவருக்கெல்லாம் ஆஸ்கார் விருது கொடுக்கலாம். மக்களை வெகு நாட்கள் ஏமாற்ற முடியாது,” எனக் குறிப்பிட்டிருந்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில், அமைச்சர் அன்பில் மகேஷ் தேம்பி அழும் வீடியோ வைரலானது. அதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸ் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசலுக்கு காரணம் இதுதான்… யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை – நிர்மலா சீதாராமன் பேட்டி
வளர்த்து ஆளாக்கிய தந்தையை கொச்சைப்படுத்திய அன்புமணி:
மரியாதைக்குரிய அண்ணன் @draramadoss அவர்கள், நாகரீகமற்று கொச்சையாகப் பேசி இருக்கிறார்.
கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களில் 9 பேர் பள்ளிக்குச் செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன்.…
— Anbil Mahesh (@Anbil_Mahesh) September 29, 2025
இதற்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு, அன்புமணி ராமதாஸிற்கு கடும் பதில் அளித்துள்ளார். அந்த பதிவில், “கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களில் ஒன்பது பேர் பள்ளிக்கு செல்லும் வயதிலும், எதிர்காலத்தில் பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதிலும் உள்ள எங்கள் பிஞ்சு குழந்தைகள். அவர்களை என்னுள் ஒருவராக கருதுகிறேன். ஆறுதல் தேடும் கோடி மனங்களில் நானும் ஒருவன்.
எங்கள் தலைவர் முதலமைச்சர் அவர்கள் சொல்வது போல் எந்த தலைவரும் தன் ஆதரவாளர்கள் இறப்பதை விரும்ப மாட்டார். தலைவரின் வழியில் பயணிக்கும் நாங்கள் மக்களின் பக்கம் நிற்கிறோம். வளர்க்க ஆளாக்கிவிட்ட சொந்த தந்தையைக் கூட கொச்சைப்படுத்துபவரின் கருத்தை இனிமேல் பொருட்படுத்த தேவையில்லை என கருதுகிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.