நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம் – பட்டப்பகலில் பெண் வெட்டி படுகொலை – வெளியான பகீர் காரணம்
Tirunelveli Bus Stand Murder : திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை வெட்டி படுகொலை செய்த கணவரின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கணவரை கைது செய்துள்ளனர். இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
திருநெல்வேலி, மார்ச் 15 : திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை வெட்டி படுகொலை செய்த கணவரின் செயல் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கணவரை கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவடடம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் சுதாகர். கூலி தொழிலாளியான இவருக்கு பேச்சியம்மாள் என்பவருடன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கணவன் மற்றும் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரியான பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இதனால் குடும்பத்திற்குள் அடிக்கடி சச்சரவுகள் தொடர்ந்து வந்திருக்கின்றன.
இதனையடுத்து இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். பேச்சியம்மாள் ஆத்திரத்தில் சுதாகர் மீது அவதூறான கருத்துககள் தெரிவித்ததாகவும் அதனால் தன் மனைவி மீது சுதாகர் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பேச்சியம்மாள் மார்ச் 15, 2026 அன்று திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சுதாகர் பேருந்து நிலையத்தில் வைத்து பேச்சியம்மாளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். பதிலுக்கு பேச்சியம்மாளும் சுதாகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்.
இதையும் படிக்க : கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. டெல்லியில் சிபிஐ முன்பு இன்று ஆஜராகிறார் விஜய்..




வாக்குவாதம் முற்றிய நிலையில் சுதாகர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பேச்சியம்மாளை தாக்க முயன்றுள்ளார். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட பேச்சியம்மாள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார். அனால் அவரை விடாமல் பின்தொடர்ந்து வந்த சுதாகர் பேச்சியம்மாளை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இதனையடுத்து பேச்சியம்மாள் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பரபரப்பான பேருந்து நிலையத்தில் மக்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலை சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருநெல்வேலி நகர காவல்நிலைய காவலர்கள் பேச்சியம்மாளின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்கா பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்தில் வந்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிக்க : கல்லூரி பேருந்து மீது ரயில் மோதி விபத்து – கரூர் அருகே பரபரப்பு
இதற்கிடையில் சுதாகர் திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார. அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பேச்சியம்மாள் அடிக்கடி யாருடனோ செல்போனில் பேசியதாகவும், இதனால் சந்தேகப்பட்டு அவருடன் சுதாகர் தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவரை பிரிந்த பேச்சியம்மாள் தன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். மேலும் திருநெல்வேலியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.