AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிறுவர்களிடையே மோதல்… அரிவாள் வெட்டு – திருநெல்வேலி அருகே பரபரப்பு

Ambasamudram Minor Attack: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 2 சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் சிறுவன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதில் சிறுவன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சிறுவர்களிடையே மோதல்… அரிவாள் வெட்டு – திருநெல்வேலி அருகே பரபரப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Mar 2026 19:52 PM IST

திருநெல்வேலி, மார்ச் 12 : திருநெல்வேலி அருகே அம்பாசமுத்திரம் அருகே இரண்டு சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் சிறுவனுக்கு அரிவாள் வெட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவனை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் என்ற பகுதியில் பூக்கட்டும் வேலை பார்க்கும் சிறுவனுக்கும் அதே பகுதியில் 11 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கும் மார்ச் 11, 2026 அன்று வாக்குவாதம் நடைபெற்றது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

திருநெல்வேலி அருகே சிறுவனுக்கு அரிவாள் வெட்டு

இருப்பினும் பள்ளி மாணவன், பூக்கட்டும் சிறுவன் மீது ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவன், அந்த சிறுவனின் வீட்டுக்க சென்னரு அரிவாளால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியிருக்கிறார். இந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடைந்த சிறுவனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க : 3 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு.. குற்றவாளிக்கு கனவிலும் நினைத்திடாத தண்டனை.. நெல்லை போக்ஸோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சென்னைறு அங்கு சிகிச்சை பெற்று வரும் சிறுவனிடம் விசாரணை நடத்திர். பின்னர் அந்த சிறுவன் அளித்த தகவலின் பெயரில் 11 ஆம் வகுப்பு மாணவனை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனிடம் அரிவாளால் தாக்கியது ஏன்? அரிவாள் கிடைத்தது எப்படி உள்ளிட்ட கேள்விகளை கேட்டனர். அதற்கு சிறுவன் அளித்த பதில்களை பதிவு செய்த காவல்துறையினர் மாணவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு சிறுவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம், அரிவாளால் தாக்கும் அளவுக்கு சென்றிருப்பது அம்பாசமுத்திரம் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க : நகைக்காக நடந்தக் கொடூரக் கொலை.. உதவி செய்வது போல் நடித்து கைவரிசை காட்டிய தாய் – மகள் கைது!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வன்முறை, வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தினமும் ஒரு சம்பவம் நடைபெற்றுவருவது குறிப்பாக தேர்தல் நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. காவல்துறையினர் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மேலும் இதுபோன்ற சம்பவங்களும் இது நடைபெறாதவாறு அரசு தலையிட வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக இருக்கிறது.

Follow Us