AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பள்ளி வாகனங்கள் இயங்காது – தனியார் பள்ளி சங்கங்கள் எச்சரிக்கை – என்ன நடந்தது?

தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் பள்ளி வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் ப்ரைமரி, நர்சரி, மெட்ரிக், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. ரூ.3,000 மதிப்புள்ள ஜிபிஆர்எஸ் கருவியை ரூ.18,000 கொடுத்து வாங்கிப் பொருத்த வேண்டும் என RTOக்கள் நிர்பந்தம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

பள்ளி வாகனங்கள் இயங்காது – தனியார் பள்ளி சங்கங்கள் எச்சரிக்கை – என்ன நடந்தது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 May 2026 19:57 PM IST

சென்னை, மே 17 :  ஜூன் முதல் வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 லட்சம் பள்ளி வாகனங்களை இயக்க மாட்டோம் என தனியார் ப்ரைமரி, நர்சரி, மெட்ரிக், மேல்நிலை, சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது. ரூ.3,000 மதிப்புள்ள ஜிபிஆர்எஸ் கருவியை ரூ.18,000 கொடுத்து வாங்கிப் பொருத்த வேண்டும் என ஆர்டிஓக்கள் நிர்பந்தம் எனவும், எஃப்சி வழங்க லஞ்சம் கேட்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனியார் பள்ளி சங்கங்கள் எச்சரிக்கை

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைகள் முடிவடைந்து பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க : நெல்லையில் கொடூரத்தின் உச்சம்.. குழந்தை கண் முன்னே தாய் வெட்டி படுகொலை.. மர்ம நபர்கள் வெறிச்செயல்..!

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை போக்குவரத்துத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதற்காக போக்குவரத்துத்துறை, கல்வித்துறை மற்றும் காவல்துறை ஆதியோர் அடங்கிய சிறப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் நேரடியாக கல்வி நிறுவனங்களுக்கு சென்றோ அல்லது, வாகனங்களை வரவழைத்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வின்போது பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களில் அவசர கால வழி, ஜன்னல்கள், கதவுகள் தீயணைப்பு கருவிகல், முதலுதவி பெட்டிகள், வேகக்கட்டுப்பாடு கருவி மற்றும் ஓட்டுநர்களின் பார்வை திறன் உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஜூன் முதல் வாரத்துக்குள் இந்த ஆய்வு பணிகள் அனைத்தையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த புதிய நடைமுறைகள் தங்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக தனியார் கல்வி நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் மூலம் மாணவர்களைப் பாதுகாப்பாக அழைத்து சென்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது அரசு விதித்துள்ள விதிகள் குறிப்பாக உள்ளூர் பள்ளி வாகனங்களுக்கு ஜிபிஆர்எஸ் விதிகளை பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பைக் மீது மோதிய அரசுப் பேருந்து.. சிகிச்சைக்கு சென்றவர் உள்பட மூவர் பலி.. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கொடூர விபத்து!

மார்கெட்டில் ரூ.3000க்கு கிடைக்கும் இந்த கருவிகளை குறிப்பிட்ட நிறுவனங்களில் இருந்து ரூ.18,000க்கு வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்துகின்றனர். இந்த கருவி பொறுத்தவில்லை என்றால் தகுதி சான்று வழங்க மறுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஜூன் மாதம் முதல் 1 லட்சம் பள்ளி வாகனங்களை இயக்க மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Follow Us