புதுடெல்லி ரயில் நிலையத்தில் இந்தோனேசிய பெண்ணின் துப்பட்டாவை எடுத்து கொடுக்க ரயில் தண்டவாளத்தில் குதித்த முதிய இந்தியரின் செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராமில் வெளியான வீடியோவில், ரயிலின் கதவுப் பகுதியில் நின்றிருந்த அந்த பெண், கேமராவை கையாளும்போது தற்செயலாக துப்பட்டாவை ரயிலும் பிளாட்பாரமும் இடையிலான இடைவெளியில் தவறவிட்டார்.