AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிகரித்த டீசல் விலை.. ஆம்னி பேருந்து கட்டணம் உயர்கிறதா? சங்க தலைவர் அன்பழகன் விளக்கம்!

Tamil Nadu Omni Bus Ticket Prices: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளின் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதா என்பது தொடர்பாக பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் விளக்கம் அளித்துள்ளார்.

அதிகரித்த டீசல் விலை.. ஆம்னி பேருந்து கட்டணம் உயர்கிறதா? சங்க தலைவர் அன்பழகன் விளக்கம்!
தமிழகத்தில் ஆம்னி பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்கிறதா
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 16 May 2026 22:15 PM IST

தமிழகத்தில் தினந்தோறும் சுமார் 5,800 தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு சுமார் 7,700-க்கும் மேற்பட்ட ட்ரிப்புகள் சென்று வருகிறது. இதன் மூலம், தமிழகத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயனடைந்து வருகின்றனர். இதன் மூலம் தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு துணை நிற்கும் வகையில் முக்கிய துறையாக ஆம்னி பேருந்துகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் உள்ளிட்டவை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஏரி பொருள், சமையல் எரிவாயு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டீசல் மற்றும் பெட்ரோல் விலை சுமார் ரூ.3 உயர்த்தப்பட்டது.

தனியார் ஆம்னி பேருந்து டிக்கெட் கட்டணம் அதிகரிக்குமா

அதன்படி, டீசல் ஒரு லிட்டர் ரூ.92.39- இல் இருந்து ரூ.95.25- ஆக உயர்ந்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு காரணமாக நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் தனியார் பொது போக்குவரத்து மற்றும் ஆம்னி பேருந்துகள் தொழில் கடும் பாதிப்பை சந்திக்கும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக, தனியார் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்வி பொதுவாக எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆம்னி பேருந்துகள் சங்க தலைவர் அன்பழகன் கூறுகையில்,

மேலும் படிக்க: பிரதமர் மோடி வேண்டுகோள்: தமிழக ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் 4- ஆக குறைப்பு!

பொதுமக்களின் நலனால் டிக்கெட் கட்டணம் உயர்த்தவில்லை

கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் கடுமையான பொருளாதார சிக்கல்கள், சாலை வரி உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு, பேருந்துகளுக்கான உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அதிகரிப்பு ஆகிய கடும் இன்னல்களை சந்தித்தபோதும் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகளுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவில்லை. தற்போதும், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பேருந்து டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படாது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சந்திக்கும் இன்னல்கள்

மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிகப்படியான சாலை வரி மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வரும் சுங்கச்சாவடி கட்டணங்கள், பேருந்துகளின் உதிரி பாகங்கள் மற்றும் பராமரிப்பு செலவு ஆகியவை அதிகரிப்பு காரணமாக காப்பீடு மற்றும் அனுமதி செலவுகள் உயர்வு, மாநிலங்களுக்கு இடையேயான வரி மற்றும் அமலாக்க சிக்கல்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், ஆம்னி பேருந்து தொழிலில் மிகப்பெரிய இடையூறு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: தேர்தல் தோல்வி எதிரொலி.. திமுக அமைத்த கள ஆய்வு குழுவில் இடம் பெற்றவர்கள் யார்.. யார்.. முழு விவரம் உள்ளே!

Follow Us