AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிரதமர் மோடி வேண்டுகோள்: தமிழக ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் 4- ஆக குறைப்பு!

Tamil Nadu Governor Convoy Reduced : நாட்டில் எரிபொருள் சிக்கனம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பாதுகாப்பு கான்வாய் வாகனங்கள் எண்ணிக்கை 4- ஆக குறைக்கப்பட்டு உள்ளன.

பிரதமர் மோடி வேண்டுகோள்: தமிழக ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் 4- ஆக குறைப்பு!
தமிழக ஆளுநர் கான்வாய் வாகனங்கள் குறைப்பு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 May 2026 14:34 PM IST

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களுக்கு 7 வேண்டுகோள்கள் விடுத்திருந்தார். இதில், மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் போர் சூழல் காரணமாக எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெய் ஏற்றுமதி முற்றிலுமாக தடைபட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இதற்காக பொதுமக்கள் அனைவரும் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி செல்லும் வாகனத்துடன் சேர்த்து சுமார் 10- க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாதுகாப்பு பணிக்காக உடன் சென்று வந்தன. ஆனால், எரிபொருள் உபயோகத்தை சிக்கனப்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு வாகனங்கள் சுமார் 50 சதவீதம் குறைக்கப்பட்டு 4 வாகனங்கள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழக ஆளுநரின் கான்வாய் வாகனங்கள் குறைப்பு

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று கேரள மாநில ஆளுநரும், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதில், ஆளுநர் அர்லேகர் அலுவல் ரீதியாகவும், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்லும் போது ஆளுநருக்காக சுமார் 10 காவல் துறை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, ஆளுநருக்கு வழங்கப்பட்டு வந்த காவல்துறை பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை 4- ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மக்களை நிற்க வைக்கக்கூடாது.. அமரவைத்து தான் பேச வேண்டும்.. முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி!!

பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் கட்டுப்பாடு

ஆளுநர் கான்வாயில் இருந்து சுமார் 6 வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இதே போல, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் பணிபுரிந்து வரும் ஆளுநர்கள் மற்றும் முதல்வர்கள் ஆகியோரின் பாதுகாப்பு வாகனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை சிக்கனப்படுத்தும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன. அத்துடன், தனிநபர் வாகன பயன்பாட்டில் எரிபொருள் சிக்கனத்தை குறைக்கும் வகையில் டெல்லியில் தனியார் நிறுவன ஊழியர்கள் வாரத்துக்கு 2 நாட்கள் வீட்டிலிருந்து பணி செய்யுமாறு அந்த மாநிலத்தின் முதல்வர் ரேகா குப்தா உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மெட்ரோ ரயிலில் பொதுமக்களுடன் பயணித்த ஆளுநர்

மேலும், தமிழகத்தின் முன்னாள் ஆளுநராகவும், மேற்கு வங்க மாநிலத்தின் தற்போதைய ஆளுநராக இருந்து வரும் ஆர். என். ரவி தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்து பொது போக்குவரத்தை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பொதுமக்களும் மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். இதில், குஜராத் மாநில ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் காந்திநகர் முதல் அகமதாபாத் வரை எந்தவித சிறப்பு வசதிகளும் இன்றி மெட்ரோ ரயிலில் பயணம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: “நீட் தேர்வை முற்றாக ஒழிக்க வேண்டும்”.. தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்!!

Follow Us