AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு.. விஜய்க்கு எந்த துறை தெரியுமா?

Tvk Ministers Allotted Departments : தமிழக வெற்றிக் கழக அரசில் புதிதாக பதவி ஏற்ற முதல் அமைச்சர் ஜோசப் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், முதல்வர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் ஆகியோருக்கு எந்த துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கலாம்.

தவெக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு.. விஜய்க்கு எந்த துறை தெரியுமா?
தவெக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 May 2026 17:15 PM IST

தமிழகத்தில் புதிய அரசாக கடந்த மே 10- ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகம் பொறுப்பேற்றுக் கொண்டது. அத்துடன், தமிழகத்தின் புதிய முதல்வராக தவெக தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றார். அவருடன் சேர்த்து 9 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்கள் பதவி ஏற்று சுமார் ஒரு வாரம் ஆன நிலையில் இவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதன் காரணமாக பல்வேறு துறைகளில் கோப்புகள் நிலுவையில் இருந்து வந்தன. இந்த நிலையில், தமிழக வெற்றிக்காக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக முதல்வர் விஜயின் தனிச்செயலாளர் செந்தில்குமார், தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை இன்று சனிக்கிழமை ( மே 16- ஆம் தேதி) அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசி இருந்தார்.

தவெக அமைச்சரவை இலாகாவை வெளியிட்ட தமிழக ஆளுநர்

அப்போது, தமிழக வெற்றிக்காக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் இலாகா ஒதுக்கீடு தொடர்பான பட்டியலை ஆளுநரிடம் தனிச் செயலாளர் செந்தில்குமார் வழங்கினார். இதை தொடர்ந்து, நீலாங்கரையில் முதல்வர் விஜய்யுடன், தனிச் செயலாளர் செந்தில்குமார் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியா சாமி ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், முதல்வர் விஜய் உள்பட 10 அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,

மேலும் படிக்க: பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் நடமாட்டம்?.. உருவாகும் ரகசிய நெட்வொர்க்.. முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவு..

  • முதல் அமைச்சர் ஜோசப் விஜய் – பொது நிர்வாகம், மகளிர், உள்துறை, இளைஞர் நலன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாக துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, குடிநீர் விநியோகம்.
  • அமைச்சர் என். ஆனந்த் – நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறை.
  • அமைச்சர் ஆதவ் அர்ஜுனா- பொதுப் பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை.
  • அமைச்சர் வெங்கட்ரமணன் – உணவு பாதுகாப்புத்துறை, பொது விநியோகத் துறை.
  • அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் – சட்டத்துறை, மின்சாரத்துறை.
  • அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் – நிதித்துறை.
  • அமைச்சர் டாக்டர். அருண் ராஜ் – குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை.
  • அமைச்சர் ராஜ்மோகன் – பள்ளிக் கல்வித் துறை, செய்தித்துறை, தமிழ் மேம்பாடு தகவல் தொழ்ல் நுட்பத் துறை
  • அமைச்சர் கீர்த்தனா – தொழில் துறை.
  • அமைச்சர் டி. கே. பிரபு – சுரங்கம் மற்றும் கனிமவளத்துறை.

அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் பேட்டி

தமிழக வெற்றி கழகத்தில் முதல் கட்டமாக 10 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 20 அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது: முதல்வர் விஜய் நம்பிக்கை வைத்து முக்கியமான துறையை எனக்கு அளித்துள்ளார். சட்டத்துறை, மின்சார துறையை கடந்த 25 ஆண்டு காலமாக முன்பு இருந்த அரசு குட்டி சுவராக்கி உள்ளது. திமுக ஆட்சியில் மின்சார துறையின் அழிவு காலம் ஆரம்பித்துள்ளது. மின்சாரத் துறையில் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு மேலாக கடன் உள்ளது. இவற்றையெல்லாம் சீரமைக்கும் மிகப்பெரிய பணியை என்னிடம் முதல்வர் அளித்துள்ளார். அனைத்து ஊர்களுக்குமான மின்சார தேவையே பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: வெள்ளைத் துணி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்.. தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றம்!

Follow Us