Tamil Nadu News Live Updates: கூட்டணி ஆட்சி.. அதிமுகவினருக்கு அண்ணாமலை பதில்
Tamil Nadu Breaking news Today 17 July 2025, Live Updates: 2026 சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே தேர்தலில் வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையும் என்ற கருத்து பரவி வருகிறது. இதற்கு அதிமுக மறுப்பு தெரிவித்திருந்தது

LIVE NEWS & UPDATES
-
காமராஜர் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு உரிமை கிடையாது – அண்ணாமலை
காமராஜரைத் தாண்டி காங்கிரஸுக்கு தமிழகத்தில் அடையாளம் கிடையாது என முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். அதேசமயம் காமராஜர் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு ஒரு சதவீதம் கூட உரிமை கிடையாது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
-
8 மாத குழந்தை இறந்த விவகாரம்.. பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்
சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த தேவநாதன் என்பவரின் 8 மாத குழந்தைக்கு சளி இருந்ததால் கற்பூரத்துடன் தைலம் சேர்த்து தேய்க்கப்பட்டதால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தை பிறக்கும் போதே கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
-
5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
இன்று (ஜூலை 17) நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மிக கனமழைக்கும், தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கூட்டணி ஆட்சி தான்.. அமித்ஷாவிடம் அதிமுகவினர் பேசலாம்: அண்ணாமலை!
தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். எனவே இதில் மாற்றுக் கருத்து இருந்தால் அமித்ஷாவிடம் அதிமுகவினர் பேசலாம் என முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
MK Stalin: திமுக உறுப்பினர் சேர்க்கை.. மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவு
திமுக மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். மேலும் படிக்க
-
காமராஜர் பற்றி சர்ச்சை கருத்து – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
காமராஜர் பற்றி பொதுவெளியில் விவாதங்கள் நடப்பது சரியல்ல. மரியாதைக்குரிய தலைவர்களின் மாண்பை காக்கும் வகையில்தான் எந்த கருத்தும் பகிரப்பட வேண்டும். கலகமூட்டி குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்திற்கு இடமளிக்காதீர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
-
அதிமுக கூட்டணி பலவீனமாக இருக்கிறது – அமைச்சர் தா.மோ. அன்பரசன்!
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு “மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இது பேசுபொருளாக மாறிய நிலையில் அதிமுக கூட்டணி பலவீனமாக இருப்பதால் இபிஎஸ் அழைப்பு விடுப்பதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சித்துள்ளார்.
-
TVK Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வழக்கு.. விஜய் பதிலளிக்க உத்தரவு
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தொடர்பான வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியானது தங்களின் சங்கத்தின் நிறத்தோடு ஒன்றியிருப்பதாக தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
-
காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து.. திருச்சி சிவா விளக்கம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிவா மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு அவர் விளக்கமளித்துள்ளார். அதில் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெறுமதிப்பும் கொண்டவன் நான் என கூறியுள்ளார். மேலும் படிக்க
-
தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுவன்.. திருவண்ணாமலையில் சோகம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அருகிலிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் படிக்க
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களுக்கு ஜூலை 17, 2025 இன்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலெர்ட் கொடுத்துள்ளது. இதனையடுத்து அங்கு கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருப்பதாக அறிவித்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை குறித்த தகவல்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தகவல்களை உடனுக்குடன் இந்தப் பகுதியில் தெரிந்துகொள்ளலாம். முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் (Mk Stalin) தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் பணிகள் குறித்து திட்டமிட இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் தொடர்பான திமுகவின் திட்டங்கள் குறித்து இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீர்கேடுகளால், நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாவதாகவும், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சரியான முறையில் செயல்படவில்லை எனக்கூறியும் அதிமுக (Admk) சார்பில் உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் காஞ்சிபுரம் அதிமுக சார்பில் ஜூலை 17, 2025 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. ஆர்ப்பாட்டம் குறித்து இந்தப் பகுதியில் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
மேலும் 10 அம்சக் கோரிக்கைகளை முன் வைத்து ஜூலை 17 முதல் 18 ஆம் தேதி வரை மாவட்ட தலைநகர்களில் மறியல் போராட்டத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். போராட்டத்தின் போது எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் அரசின் நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் இந்த பகுதியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
Published On - Jul 17,2025 7:01 AM