போலி உதவி கலெக்டர்.. வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த பெண்.. திருமணத்திற்கு பிற்கு வெளிவந்த உண்மை!
Fake Assistant Collector Arrested | நாமக்கலில் போலி நியமன ஆணை, அடையாள அட்டையை தயாரித்து உதவி கலெக்டர் என ஏமாற்றி வங்கி உதவி மேலாளரை திருமணம் செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு அந்த பெண் ஏமாற்றியது தெரிய வந்த நிலையில், குடும்பத்தினரின் புகாரின் அடிப்படையில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நாமக்கல், ஜூலை 17 : நாமக்கலில் (Namakkal) உதவி கலெக்டர் என பொய் சொல்லி வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், அந்த பெண் போலி ஆவணங்களை பயன்படுத்தி அடையாள அட்டையை தயாரித்ததை கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், அந்த பெண் போலி அடையாள அட்டையை தயாரித்தது எப்படி, வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்தது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உதவி கலெக்டர் என பொய் சொல்லி வங்கி அதிகாரியை திருமணம் செய்த பெண்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகாவில் உள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார். 29 வயதாகும் இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கும், நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் பகுதியை சேர்ந்த தன்வர்த்தினி என்ற 29 வயது பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது அந்தப் பெண் பொள்ளாச்சியில் உதவி கலெக்டராக பணியாற்றுவதாக அவரது பெற்றோர் கூறியுள்ளனர். ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களில் அவர் உதவி கலெக்டராக பணியாற்றவில்லை என்பது தெரியவந்துள்ளது.
திருமணத்திற்கு பிறகு வெளியே வந்த உண்மை
இந்த நிலையில் நவீன் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் இந்த விவகாரம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணை கைது செய்ய போலீசார், தன்வர்த்தினியின் மடிக்கணினி உள்ளிட்ட சில ஆவணங்களை கைப்பற்றினர். கடவுச்சொல் தெரியாததால் மடிக்கணினியில் என்ன தகவல்கள் இருக்கின்றன என்பதை போலீஸார் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு இடையே போலி ஆவணங்களை தயாரிக்க யாரேனும் உதவி செய்துள்ளார்களா என்பதை கண்டறிய தன்வர்த்தினியை காவலில் எடுத்து விசாரிக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க : சென்னையில் சோகம்: தைலம், கற்பூரம் தேய்த்ததால் மூச்சுத்திணறி உயிரிழந்த 8 மாதக் குழந்தை
போலி நியமண ஆணை மற்றும் அடையாள அட்டை
போலீசாரன் கோரிக்கையின் அடிப்படையில் இரண்டு நாட்கள் காவலில் வைத்த விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த விசாரணையில் தன்வர்த்தினி குரூப் 1 குரூப் 2 தேர்வுகளை எழுதியுள்ளார் என்றும் அவர் அவற்றில் தேர்ச்சி பெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் உதவி கலெக்டர் நியமன உத்தரவு ஆணையையும், அடையாள அட்டையையும் அவரே தயாரித்து உள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.