சென்னையில் இரவு நேரங்களில் பெய்யும் மழை.. கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: அடுத்து வரும் நாட்களில் காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வருகிறது.

வானிலை நிலவரம், ஜூலை 18, 2025: தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது என்றும் மேற்கு திசை காற்றின் வேகமாறு காரணமாகவும் ஜூலை 18 2025 தேதியான இன்று நீலகிரி கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 19 2025 மற்றும் ஜூலை 2025 ஆகிய இரண்டு நாட்களுக்கு நாட்களில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும் தேனி திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சென்னையில் குறையும் வெப்பநிலை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் அனேக பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அதிகபட்ச வெப்ப நிலை என்பது 37 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பெண்கள், குழந்தைகளுக்கு பிரச்னையா? ஈரோட்டில் போலீஸ் அக்கா திட்டம்.. முழு விவரம் இதோ!
சென்னையில் மழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு வந்தாலும் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலையே நீடித்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து தஞ்சாவூர் 39 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
அடுத்த 4 – 5 நாட்களுக்கு கனமழை இருக்கும் – பிரதீப் ஜான்:
KTCC (Chennai) Rain update – next few days we will be getting very good thunderstorms in coming 4-5 days including today.
Today storms are perfectly circling Chennai and should grow in size nearing Chennai and give very good spell in the next 1-2 hours.
Enjoy the spells. pic.twitter.com/9NddgUfhat
— Tamil Nadu Weatherman (@praddy06) July 17, 2025
சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 37.1 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 36.5 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. இந்த சூழலில் அடுத்து வரும் நாட்களில் காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வருகிறது.