Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பெருந்தலைவர் காமராஜர் குறித்த சர்ச்சை கருத்து.. திருச்சி சிவா சொன்ன விளக்கம்..

MP Trichy Siva: திருச்சி சிவாவிற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் அவர் இதனை தெளிவு படுத்துவதற்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல என குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தலைவர் காமராஜர் குறித்த சர்ச்சை கருத்து.. திருச்சி சிவா சொன்ன விளக்கம்..
எம்.பி சிவா
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Jul 2025 10:45 AM

சென்னை, ஜூலை 17, 2025: சமீபத்தில் பெருந்தலைவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சிவா தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி தழும்பேறி முதலமைச்சர் ஆகவும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி எள்ளூர் மனதிலும் தனித்து இடம்பெடுத்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெறுமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், தளபதி வாழியில் கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்” என விளக்கியுள்ளார். முன்னதாக 2025 ஜூலை 15ஆம் தேதி பிறந்த தலைவர் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது சென்னை பெரம்பூர் பகுதியில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

எம்.பி திருச்சி சிவா சொன்னது என்ன?

அந்த கூட்டத்தில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் காமராஜர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அதாவது காமராஜர் ஏசி இல்லாமல் உறங்க மாட்டார், இருக்க மாட்டார் என குறிப்பிட்டிருந்தார் இந்த பேச்சு மிகவும் சர்ச்சைக்குள்ளான விஷயமாக மாறியது. திருச்சி சிவாவின் பேச்சுக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கண்டனங்கள் தெரிவித்து தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எம்.பி ஜோதிமணி கண்டனம்:

அதில், “ காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் வாடகை கொடுத்து வந்தது. அது அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிரிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. காமராஜருக்கு எதிராக பரப்பப்படுகின்ற கட்டுக் கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் அவரது ஆன்மா நம்மை மன்னிக்காது” என காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

திருச்சி சிவா கொடுத்த விளக்கம்:


திருச்சி சிவாவிற்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில் அவர் இதனை தெளிவு படுத்துவதற்காக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் அதில், “ பெருந்தலைவர் காமராசரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் தன்மையில் நான் பேசியதாகக் கருத்து கொண்டு விவாதங்கள் வலுத்துக் கொண்டு வருகின்றன.

மேலும் படிக்க: முன்பதிவில்லா பெட்டிகளில் கூட்ட நெரிசல் தவிர்க்க புதிய முயற்சி.. இனி இவ்வளவு டிக்கெட் மட்டும் தான்..

நான் எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றிப் பேசும்போதுகூட கண்ணியத்தோடு விமர்சிப்பதைப் பலரும் அறிவார்கள். கல்விக்கண் திறந்த காமராசர் என்றும், மதிய உணவுத் திட்டத்தின் மூலமாக ஏழை வீட்டுப் பிள்ளைகள் கல்வி கற்க பள்ளிக்கூடம் வருவதற்கு இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர் என்பதையும் பல மேடைகளில் உருக்கமாகவும், உணர்ச்சிகரமாகவும் நான் பேசுவது வழக்கம்.

தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை ஏற்க மாட்டேன்:

அவர் பிறந்தநாளை “கல்வி வளர்ச்சி நாளாக” கடைப்பிடித்து அவரின் புகழுக்கு நாளும் மெருகேற்றும் இன்றைய கழகத் தலைவர் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி அண்ணன் மு.க.ஸ்டாலின் தலைமையின்கீழ் பணியாற்றும் நான், மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு படிவதை எந்த வகையிலும் யார் செய்தாலும் ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல.

மேலும் படிக்க: விஸ்வரூபம் எடுக்கும் போலி திருக்குறள் விவகாரம்!

நாட்டு விடுதலைப் போரில் பல ஆண்டுகள் சிறையேகி, தியாகத் தழும்பேறி, முதலமைச்சராகவும், அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவராகவும் மக்கள் தொண்டாற்றி, எல்லோர் மனதிலும் தனித்த இடம் பிடித்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் பெருமதிப்பும் கொண்டவன் நான். அண்ணா, கலைஞர், தளபதி வழியில் – கண்ணியம் காக்கும் கடமை கொண்ட கழகத் தொண்டன்!

இந்த விளக்கத்தினை எல்லோரும் அன்புகூர்ந்து ஏற்று என் உரையில் நான் கூறிய செய்தியினை மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம் என அனைவரையும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்!” என குறிப்பிட்டுள்ளார்.