” இவ்வளவு அசிங்கப்பட்டு திமுக கூட்டணியில் இருக்க வேண்டுமா? “ – கம்யூனிஸ்ட், வி.சி.கவிற்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி..
Edappadi Palanisamy: தேர்தல் நெருங்கும் நிலையில், எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து பிரச்சார பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதில் சிதம்பரம் தொகுதியில் மக்களை சந்தித்து பேசிய அவர், அதிமுக பாஜக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என பேசியுள்ளார்

எடப்பாடி பழனிசாமி: 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளார். அந்த வகையில் ஜூலை 16 2025 தேதியான நேற்று சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர் பாஜக அதிமுக கூட்டணிக்கு விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதாவது அதிமுக பாஜக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம் என பேசியுள்ளார். விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் திருமாவளவன் அதிமுக கட்சி கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இணையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சட்டமன்ற. தேர்தல் நடக்க இன்னும் பத்து மாத காலங்களே இருக்கும் நிலையில் அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது.
பிரச்சார சுற்றுப்பயணத்தில் எடப்பாடி பழனிசாமி:
2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்ள அனைத்து கட்சிகள் தரப்பிலும் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அதிமுக தலைமையில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு உள்ளார். ஜூலை 7 2025 அன்று கோவை மாவட்டத்தில் தொடங்கிய இந்த முதல் கட்ட சுற்றுப்பயணம் என்பது ஜூலை 21 2025 அன்று நிறைவுக்கு வருகிறது.




அதனைத் தொடர்ந்து ஜூலை 24ஆம் தேதி முதல் மீண்டும் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது தொகுதி வாரியாக சென்று மக்களை சந்தித்து சாலை வளம் மேற்கொண்டு உரையாற்றி வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
கம்யூனிஸ்ட் – வி.சி.கவிற்கு அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி:
கண்ணுக்கெட்டிய தூரம் வரை ,
திரண்டு நின்ற தில்லை மக்களின் அன்பில் திளைத்தேன்.சிதம்பர ரகசியமாகவே ஸ்டாலினின் திமுக வைத்திருக்கும் “நீட் தேர்வு ரத்து” ரகசியம் எப்போது தான் வெளிவரும்?
என்பது இன்றும் அனைவரின்
கேள்வியாக இருக்கிறது.பொய்யிலே பிறந்த ஆட்சிக்கு ,
2026-ல் தமிழக மக்கள்… pic.twitter.com/Kgq8EeuaZ8— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) July 16, 2025
அந்த வகையில் ஜூலை 16 2025 தேதியான நேற்று சிதம்பரத்தில் மக்களை சந்தித்து உரையாற்றிய போது கம்யூனிஸ்ட் மட்டும் விசிக கட்சிகளுக்கு கூட்டணியில் சேர நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, “ திமுக கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி விழுப்புரத்தில் மாநாடு நடத்த அனுமதி கேட்டபோது மறுக்கப்பட்டது. அதேபோல் திருச்சியில் விசிக தரப்பில் மாநாடு நடத்த அனுமதி கேட்ட போது அதுவும் மறுக்கப்பட்டது.
Also Read: 20 லட்ச மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தமிழ்நாடு அரசு டெண்டரில் 3 முக்கிய நிறுவனங்கள்..!
அதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் நடக்கக்கூடாது என குறிப்பிடப்பட்டது. இவ்வளவு அசிங்கப்பட்டு அந்த கூட்டணியில் இருக்க வேண்டுமா ? அதிமுக பாஜக கூட்டணிக்கு வரும் கட்சிகளை நாம் ரத்தின கம்பளம் விரித்து வரவேற்போம்” என பேசியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வருகை தரலாம் என பேசி இருந்த நிலையில் தற்போது வெளிப்படையாக கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.