Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நீலகிரி டூ கோவை.. அடுத்த 6 நாட்களுக்கு பிச்சு உதறபோகும் மழை.. சென்னையின் வானிலை நிலவரம் என்ன?

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும். குறிப்பாக, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2025 ஜூலை 18ஆம் தேதி ஒருசில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி டூ கோவை.. அடுத்த 6 நாட்களுக்கு பிச்சு உதறபோகும் மழை.. சென்னையின் வானிலை நிலவரம் என்ன?
மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Jul 2025 15:06 PM

 சென்னை, ஜூலை 17 :  தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு  கனமழை தொடரும் என  வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் (Tamil Nadu Rains) பெய்யக் கூடும் என  தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே தமிழகத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. பகல் நேரங்களில் அனல் காற்றுடன் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.  ஆனால், மாலை நேரங்களில்  பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று தினங்களாகவே  சென்னை உட்பட பல்வேறு  மாவட்டங்களில் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மேலும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 2025 ஜூலை 17ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை ஒருசில இடங்களில் மிதமான மழையும், கனமழையும் பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025  ஜூலை 17ஆம் தேதியான இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இனி கனமழை இருக்கும்.. எத்தனை நாட்களுக்கு?

2025 ஜூலை 18ஆம் தேதி நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சீபுரம், வேலூர், விழுப்புரம், மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 6 நாட்களுக்கு பிச்சு உதறபோகும் மழை


2025 ஜூலை 19,20ஆம் தேதிகளில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 2025 ஜூலை 21ஆம் தேதி நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : சென்னையில் வெளுக்கப்போகும் கனமழை.. மற்ற மாவட்டங்களில் எப்படி? வானிலை மையம் குளுகுளு அப்டேட்!

2025 ஜூலை 23ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 17ஆம் தேதியான இன்று மிதமான மழையும், 2025 ஜூலை 18ஆம் தேதியான நாளை நகரின் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.