சென்னை வாசிகளுக்கு குட் நியூஸ்.. கொட்டப்போகும் மழை.. எத்தனை நாட்களுக்கு?
Tamil Nadu Rain Alert: ஜூலை 15 2025 அன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூலை 16 2025 மற்றும் ஜூலை 17 2025 ஆகிய இரண்டு நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஜூலை 13, 2025: சென்னையில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாலை நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக நகரின் அனேக பகுதிகளில் நல்ல மழை பதிவாகி வருகிறது. அந்த வகையில் ஜூலை 12 2025 தேதியான நேற்று சென்னை வளசரவாக்கம், ஐஸ் ஹவுஸ், நெற்குன்றம், சைதாப்பேட்டை, வடபழனி, அமைந்தகரை, பூந்தமல்லி, சென்னை சென்ட்ரல், நந்தனம், எம்ஜிஆர் நகர், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் தலா மூன்று சென்டிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. நகரின் பிற பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பதிவானது. அதனைத் தொடர்ந்து கோவை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இரண்டு சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு:
இது ஒரு பக்கம் இருக்க மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 13 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 2025 அன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜூலை 16 2025 மற்றும் ஜூலை 17 2025 ஆகிய இரண்டு நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பள்ளிகளில் ’ப’ வடிவில் இருக்கை வசதி.. நிறுத்தி வைத்ததா பள்ளிக்கல்வித்துறை? உண்மை என்ன?
வெப்பநிலை எப்படி இருக்கும்?
மேலும் அதிகபட்ச வெப்பநிலை என்பது அதே போல் தான் இருக்கும் எனவும், ஒரு சில பகுதிகளில் மட்டும் இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் காலை நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: திருவள்ளூரில் 5 மணி நேரத்திற்கும் மேலாக பற்றி எரியும் சரக்கு ரயில்.. மீட்பு பணிகள் தீவிரம்..
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
மேலும் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வங்க கடல், தெற்கு வங்க கடலில் தெற்கு பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்க கடலின் சில பகுதிகள், மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக் கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் காரணத்தால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.