Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்போகும் மழை..

Tamil Nadu Weather Update: ஆந்திரா கடலோர பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் உள் தமிழகம் பகுதிகளில் மிக கனமழை கொண்டு வரக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டப்போகும் மழை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Jul 2025 06:53 AM

வானிலை நிலவரம், ஜூலை 14, 2025: தமிழகத்தில் தொடர்ந்து சில நாட்களாக வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில் மதுரையில் தொடர்ச்சியாக 40 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவாகி வரும் காரணத்தால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து நாகையில் 39.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேபோல சென்னை பொறுத்தவரையில் அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 38.8 டிகிரி செல்சியசும் நுங்கம்பாக்கத்தில் 37.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு:

மேலும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக ஜூலை 14 2025 தேதியான இன்று தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 2025 ஆன நாளை தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 2025 ஜூலை 16 மற்றும் ஜூலை 17 ஆகிய இரண்டு நாட்களில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திருப்பரங்குன்றத்தில் குமரனுக்கு கொண்டாட்டம்.. 14 ஆண்டுகளுக்கு பின் நடந்த மகா கும்பாபிஷேக விழா..

சென்னை பொறுத்தவரை பகல் நேரங்களில் வெப்பநிலையின் தாக்கம் 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வரும் நிலையில் மாலை நேரங்களில் வெப்ப சலனம் காரணமாக ஆங்காங்கே மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி – பிரதீப் ஜான்:


அதேபோல் வரும் நாட்களில் ஆந்திரா கடலோர பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் உள் தமிழகம் பகுதிகளில் மிக கனமழை கொண்டு வரக்கூடும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். அதேபோல் காவேரி நீர் பிடிப்பு படுகை, கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு மலைப்பகுதிகள், வால்பாறை மற்றும் நீலகிரி உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி பகுதியால் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.