Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Tamil Nadu News Highlights : பிரதமர் மோடி வருகை..! திருச்சியில் ட்ரோன் பறக்க தடை விதிப்பு..!

Tamil Nadu Breaking News Today 24 July 2025, Updates: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுகள் நல்லதாக உள்ளன எனவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வரின் டிஸ்சார்ஜ் தேதி மருத்துவர்களுடன் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

C Murugadoss
C Murugadoss | Updated On: 24 Jul 2025 20:40 PM
Share
Tamil Nadu News Highlights : பிரதமர் மோடி வருகை..! திருச்சியில் ட்ரோன் பறக்க தடை விதிப்பு..!
தமிழ்நாடு செய்திகள்

தமிழ்நாட்டில் ஜூலை 24, 2025 அன்று ஆடி அமாவாசை கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி திருக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிரசித்திபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்க நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பார்கள். இதற்காக தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் ( Special Bus) ஏற்பாடு செய்யப்ப்டுள்ளன. இது குறித்த தகவல்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் மின்னணு பயிர் கணக்கீடு பணியினை மேற்கொள்ள தகுதியுடைய நிறுவனம் ஜூலை 24. 2025 அன்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஜூலை 24 மற்றும் 25, 2025 ஆகிய இரண்டு தினங்களில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு (Rain Update) வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக தமிழகத்தில் ஜூலை 24, 2025 அன்று மின்தடை( Power cut today) செய்யப்படவிருக்கும் பகுதிகள் குறித்து இந்தப் பகுதியில் உடனுக்குடன் அப்டேட் செய்யப்படும். முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் நிறுவனம் சார்பில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான நேர்முகத்தேர்வு ஜூலை 24, 2025 அன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது. இந்த பணிக்கு ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்தவர்கள் நேர்முகத்தேர்வில் பங்கேற்கலாம்.

மேலும் தமிழ்நாடு செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 24 Jul 2025 07:00 PM (IST)

    Organ Donation: தென்காசியில் ஆட்டோ ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம்..!

    தென்காசியில் உடல் நலக்குறைவால் மூளைச்சாவு அடைந்த ஆட்டோ ஓட்டுநரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது. சுரண்டை அருகே வி.கே.புதூரை சேர்ந்த மாரிதுரை உடல்நலக்குறைவால் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து, அவரது சிறுநீரகங்கள், இதயம், கருவிழிகள், கல்லீரலை தானமாக குடும்பத்தினர் வழங்கினர்.

  • 24 Jul 2025 06:45 PM (IST)

    Edappadi Palaniswami: அதிமுக மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி – எடப்பாடி பழனிசாமி

    கந்தர்வகோட்டையில் நடந்த பரப்புடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “கூட்டணிக்காக கடையை விரித்தும் வியாபாரம் ஆகவில்லை என்று கூறுகின்றனர். அதிமுக ஐஎஸ்ஐ முத்திரை மாதிரி மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ள கட்சி” என்று தெரிவித்தார்.

  • 24 Jul 2025 06:31 PM (IST)

    TVK Vijay: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண உடல்நலம் பெற வேண்டும் – தவெக தலைவர் விஜய்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் பரிபூரண உடல்நலம் பெற்று கடமை ஆற்றிட வேண்டும் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசியல் களத்தில் திமுக மற்றும் தவெக கட்சிகளுக்கிடையே கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், இந்த அறிக்கை தலைவர்களிடையே நல்ல மதிப்பை வெளிபடுத்தியுள்ளது.

    தவெக தலைவர் விஜய் ட்விட்டர் போஸ்ட்:

  • 24 Jul 2025 06:00 PM (IST)

    PMK Ramadoss: என் வீட்டில் யார் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தார் என்று தெரியும்.. பாமக நிறுவனர் ராமதாஸ் தகவல்..!

    என் வீட்டில் யார், எதற்காக ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தார்கள் என்பது எனக்கு தெரியும். விசாரணை பாதிக்கப்படும் என்பதால் இப்போது நான் சொல்ல விரும்பவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • 24 Jul 2025 05:45 PM (IST)

    R. B. Udhayakumar: தியாகங்கள் செய்ய வேண்டும் – அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    திமுக எதிர்ப்பு நிலையில் இருப்பவர்களின் நோக்கம் நிறைவேற வேண்டும். பிரிந்து நின்றால் அது சிதைந்துவிடும். அதனால், ஓரணியில் நிறக வேண்டும், நல்ல நோக்கத்திற்காக சில தியாகங்களை செய்ய வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

  • 24 Jul 2025 05:30 PM (IST)

    PM Modi Trichy Visit: பிரதமர் மோடி வருகை..! திருச்சியில் ட்ரோன் பறக்க தடை விதிப்பு..!

    இந்திய பிரதமர் மோடியின் வருகையை தொடர்ந்து திருச்சி மாநகர எல்லைக்குள் இன்று அதாவது 2025 ஜூலை 24ம் தேதி முதல் வருகின்ற 2025 ஜூலை 27ம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதித்து திருச்சி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

  • 24 Jul 2025 05:21 PM (IST)

    Boy Kidnapping Case: சிறுவன் கடத்தல் வழக்கு.. ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை..!

    சிறுவன் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் 4 மணி நேரத்திற்கு மேலாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஏடிஜிபி ஜெயராம் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 24 Jul 2025 04:50 PM (IST)

    PMK Anbumani Ramadoss: நாளை திட்டமிட்டப்படி சுற்றுப்பயணத்தை தொடங்கும் அன்புமணி..!

    அன்புமணியின் தேர்தல் சுற்றுப்பயணத்திற்கு தடை விதிக்க ராமதாஸ் இன்று அதாவது 2025 ஜூலை 7ம் தேதி வலியுறுத்திய நிலையில், திட்டமிட்டபடி சுற்றுப்பயணம் நாளை அதாவது 2025 ஜூலை 25 தொடங்கும் என அன்புமணி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 24 Jul 2025 04:40 PM (IST)

    தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிப்பு..!

    தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 2025 ஆகஸ்ட் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதுள்ளது. விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 2025 ஆகஸ்ட் 9ம் தேதி வேலைநாள் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 24 Jul 2025 04:23 PM (IST)

    பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டிகளை மிஞ்சும் அளவிற்கு திமுக – தவெக பொது பொதுச்செயலாளர் ஆனந்த்!

    ஓரணியில் தமிழ்நாடு என்ற சூழ்ச்சி வாசகத்துடன் பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டிகளை மிஞ்சும் அளவிற்கு திமுக செயல்படுகிறது. உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்பதற்காக பண்ணையாளர்களாக வலம் வந்த திமுகவினர் இன்று பணியாளர்களாக வீதி, வீதியாக வலம் வருகின்றனர் என தவெக பொது பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

  • 24 Jul 2025 04:00 PM (IST)

    ED Ravichandran Case: அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் மீதான ED வழக்கு ரத்து..!

    அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ரவிச்சந்திரன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் இருந்து ரூ.30 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் ரவிச்சந்திரன் மீது வழக்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • 24 Jul 2025 03:45 PM (IST)

    Ajith Kumar Case: அஜித் குமார் கொலை வழக்கு – கல்லூரி பேராசிரியர் நிகிதா ஆஜர்

    சிவகங்கை அஜித் குமார் லாக் அப் கொலை வழக்கில் அவர் மீது நகை, திருட்டு புகார் அளித்த பேராசிரியர் நிகிதா, சிபிஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். மதுரையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நிகிதா மற்றும் அவரின் தாயார் வருகை புரிந்துள்ளனர்.

  • 24 Jul 2025 03:30 PM (IST)

    DMDK Premalatha: முதலமைச்சர் ஸ்டாலின் நலம் பெற வேண்டும் – தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • 24 Jul 2025 03:15 PM (IST)

    Sathankulam Case: சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு.. காவல் ஆய்வாளரின் கோரிக்கைக்கு சிபிஐ எதிர்ப்பு..!

    சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் சிறையில் உள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் அப்ரூவராக அனுமதிக்க கோரிய மனுவுக்கு சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் செய்த அனைத்து செயல்களையும், உண்மையும் கூறுவதாக ஸ்ரீதர் தாக்கல் செய்த மனு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று அதாவது 2025 ஜூலை 24ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில் கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் – பென்னிக்ஸின் குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  • 24 Jul 2025 03:00 PM (IST)

    Udhayanidhi Stalin: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம்.. உதயநிதி புகழாரம்..!

    தமிழ்நாட்டின் பள்ளிக் கல்லித்துறையில் முதல் முறையாக மலைப்பகுதியில் காலிப் பணியிடமே இல்லை என சொல்லும் அளவிற்கு 100 சதவீதம் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அன்பில் மகேஸ் பணிக்காலம்தான் பள்ளிக் கல்வித்துறையின் பொற்காலம் என முதலமைச்சர் கூறியிருக்கிறார். அது மீண்டும் பொம் எழுத்துக்களா பொறிக்கப்பட்டுள்ளது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

  • 24 Jul 2025 02:45 PM (IST)

    Tamilnadu Weather Update: அடுத்த 2 நாட்களில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

    நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இன்றும் (2025 ஜூலை 24), நாளையும் (2025 ஜூலை 25) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     

  • 24 Jul 2025 02:30 PM (IST)

    தமிழ்நாட்டை உலுக்கிய அபிராமி வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

    திருமண உறவை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் தாய் அபிராமி, காதல் மீனாட்சி சுந்தரத்திற்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

  • 24 Jul 2025 02:15 PM (IST)

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளார்.. அப்போலோ மருத்துவமனை தகவல்..!

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் உள்ளதாகவும், இன்னும் 2 நாட்களில் வழக்கமான பணிகளை மேற்கொள்வார் என அப்போலோ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. மேலும். இதயத்துடிப்பில் வேறுபாடுகள் இருந்ததால் தலைசுற்றல் ஏற்பட்டதாகவும், ஆஞ்சியோகிராம் சோதனை இயல்பாக இருந்ததாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

  • 24 Jul 2025 02:05 PM (IST)

    இபிஎஸ் குறிவைத்தால் தப்பாது.. ஆர்.பி உதயகுமார்..

    2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவிற்கு எதிரான கூட்டணி அமைக்க முயற்சிக்கிறார். நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் அதிமுகவின் கூட்டணி அழைப்பை நிராகரித்த நிலையில் ஆர்.பி. உதயகுமார் திமுகவுக்கு எதிரான பெரும்பான்மையான கட்சிகள் ஒன்றிணைந்து வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

  • 24 Jul 2025 01:45 PM (IST)

    அன்புமணி கட்சி கொடி பயன்படுத்த தடை.. ராமதாஸ் மனு

    பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை அன்புமணி பயன்படுத்த பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி பயன்படுத்துவதையும் நிர்வாகிகள் சந்திப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அன்புமணியின் உரிமை மீட்பு பயணத்திற்கு எதிராக டிஜிபி இடம் ராமதாஸ் மனு அளித்துள்ளார். மேலும் படிக்க

  • 24 Jul 2025 01:30 PM (IST)

    அன்புமணியின் உரிமை மீட்பு நடைப் பயணத்திற்கு தடை விதிக்க கோரி மனு..

    தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தும் சுற்றுப்பயணத்துக்கு தடை விதிக்க கோரி கட்சியின் நிறுவனர் ராமதாஸ் டிஜிபி இடம் மனு அளித்துள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன்பு அன்புமணி வருகின்ற 2025 ஜூலை 25ஆம் தேதி நடை பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தார்.

  • 24 Jul 2025 01:10 PM (IST)

    தொடர் மருத்துவ கண்காணிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்..

    தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலை சுற்றல் இருந்ததால் சில பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனைகள் தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்றது. தற்போது ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் ஸ்டாலினிற்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளபட்டுள்ளது. மேலும் படிக்க.. 

  • 24 Jul 2025 12:39 PM (IST)

    அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை.. அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம்

    தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளை விட நடப்பாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது அதிகரித்துள்ளது. 2025, ஜூலை 23ம் தேதி வரை 3.94 லட்சம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

  • 24 Jul 2025 12:16 PM (IST)

    அன்புமணி நடைபயணத்தால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு – ராமதாஸ்

    பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜூலை 25ம் தேதி முதல் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

  • 24 Jul 2025 11:51 AM (IST)

    பாமக தலைமை அலுவலகம் விழுப்புரத்துக்கு திடீர் மாற்றம்

    சென்னையில் செயல்பட்டு வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை அலுவலகம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்திற்கு மாற்றப்படுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் பாமக கொடியை வேறு யாரும் பயன்படுத்தகூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

  • 24 Jul 2025 11:28 AM (IST)

    MK Stalin: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை

    உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மூத்த அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அவர் தற்போது நலமுடன் உள்ளதாகவும் துரைமுருகன் கூறியுள்ளார். மேலும் படிக்க

  • 24 Jul 2025 11:10 AM (IST)

    பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்.. விபரீத முடிவு எடுத்த பெண்..

    வீட்டில் தனியாக இருந்த மருமகளிடம் மாமனார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில், மனமுடைந்த மருமகள் தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படிக்க

  • 24 Jul 2025 10:50 AM (IST)

    மருமகளிடன் பாலியல் அத்துமீறல்.. மாமனார் செய்த செயலால் அதிர்ச்சி..

    ராமநாதபுரம் அடுத்த கமுதி பகுதியை சேர்ந்தவர் 32 வயது பெண். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.  வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த பெண்ணின் மாமனார் அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மாமனார் வெளியூருக்கு சென்றுள்ளார்.

  • 24 Jul 2025 10:35 AM (IST)

    ரயில் நிலையத்தில் வீடியோ எடுத்தால் ரூ.1000 அபராதம்..

    ரயில் நிலையங்களில் வீடியோ எடுப்பது தென்பட்டால் குறைந்தபட்சம் அவர்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மேலும் பயணிகளை அச்சுறுத்தும் வகையில் ரயில் பெட்டிகளில் இருந்து கீழே குதிப்பது அல்லது ஆபத்தான முறையில் ரிலீஸ் எடுத்தால் அவர்கள் மீது கைது நடவடிக்கையும் பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க

  • 24 Jul 2025 10:20 AM (IST)

    ரயில் நிலையங்களில் இனி நோ ரீல்ஸ்.. மீறினால்..

    ரயில் நிலையங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அதனை தொடர்ந்து ரயில் நிலையங்களில் வீடியோ எடுத்து ரீல்ஸ் பதிவிடும் நபர்கள் மீது குறைந்தபட்ச ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 24 Jul 2025 09:58 AM (IST)

    பிரதமர் மோடி தமிழகம் வருகை

    பிரதமர் மோடி 2025 ஜூலை 26ஆம் தேதி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கேரளாவில் இருந்து தனி விமானம் மூலம் 2025 ஜூலை 26ஆம் தேதி இரவு 7.50 மணியளவில் பிரதமர் மோடி தூத்துக்குடிக்கு வர உள்ளார். அதைத் தொடர்ந்து, இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

    Read more

  • 24 Jul 2025 09:30 AM (IST)

    PM Modi Tamil Nadu Visit : பிரதமர் மோடியை சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி

    2025 ஜூலை 26ஆம் தேதி தூத்துக்குடிக்கு வரும் பிரதமர் மோடியை   அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  அதிமுக – பாஜக கூட்டணிக்கு பிறகான பிரதமர் மோடியின் பயணம் என்பதால் இந்த சந்திப்பு இருக்கும் என கூறப்படுகிறது

  • 24 Jul 2025 09:03 AM (IST)

    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் என்றால் என்ன?

    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் மருத்துவமனைக்கு வர முடியாத மக்களுக்காக அந்தந்த பகுதிகளிலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு இந்த முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம்  என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

    Read More

  • 24 Jul 2025 08:48 AM (IST)

    Mk Stalin : நலம் காக்கும் ஸ்டாலின் எப்போது தொடக்கம்?

    நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை, வரும் 2025, ஆகஸ்ட் 2 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மாசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த திட்டத்தில் 1,164 முகாம்கள் அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

  • 24 Jul 2025 08:30 AM (IST)

    Chennai Rains : சென்னையில் மழை விவரம்

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    Read more

  • 24 Jul 2025 08:16 AM (IST)

    எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு

    ஜூலை 25ஆம் தேதி ஆன நாளை நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 2025 ஜூலை 26 ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

  • 24 Jul 2025 08:08 AM (IST)

    Weather Today : 4 மாவட்டங்களுக்கு வருது கனமழை!

    வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதால், 2025 ஜூலை 24ஆம் தேதி ஆன இன்று தமிழகத்தில் நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 24 Jul 2025 07:50 AM (IST)

    தேர் தொடர்பான வழக்கு என்ன?

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பன்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோவிலின் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் வருவதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி, வேப்பன்தட்டை கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் மற்றும் மணிவண்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு தொடர்பான உத்தரவு தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது

    Read More

  • 24 Jul 2025 07:30 AM (IST)

    பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களில் தேர் – கோர்ட் உத்தரவு

    பெரம்பலூர் மாவட்டத்தில் வேத மாரியம்மன் கோவில் திருவிழாவில் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாக சிக்கல் எழுந்தது. இது தொடர்பான வழக்கில், பட்டியலின மக்கள் வசிக்கும் தெருக்களின் வழியே தேர் செல்ல வேண்டும் எனவும், அதற்கு தேவையான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

     

  • 24 Jul 2025 07:17 AM (IST)

    ஈபிஎஸ் சுற்றுப்பயணம் எங்கெங்கு தெரியுமா?

    இன்றைய சுற்றுப்பயண திட்டத்தின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை, ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளுக்கும், நாளை 25 ஜூலை 2025 புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம் தொகுதிகளுக்கு எடப்பாடி பழனிசாமி செல்கிறார்.

    Read More

  • 24 Jul 2025 07:04 AM (IST)

    ஜூலை 7 தொடங்கிய முதல்கட்ட சுற்றுப்பயணம்

    எடப்பாடி பழனிசாமியின் முதல் கட்ட சுற்றுப்பயணம் என்பது ஜூலை 7 2025 அன்று தொடங்கியது. இந்த சுற்றுப்பயணம் ஜூலை 21, 2025 அன்று முடிவடைந்தது. இந்த சுற்றுப்பயணத்தில் தொகுதி வாரியாக மக்களை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து இன்று அதாவது ஜூலை 24, 2025 தேதியான இன்று இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.

  • 24 Jul 2025 07:03 AM (IST)

    Edappadi Palanisamy : பழனிசாமியின் அடுத்த சுற்றுப்பயணம்

    தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார சுற்றுப்பயணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இரண்டாம் கட்ட சுற்றுப்பயணம் இன்று தொடங்குகிறது.

Published On - Jul 24,2025 7:00 AM