சென்னையில் பரவலாக மழை.. 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..
Tamil Nadu Weather Update: தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 2025 ஜூலை 24ஆம் தேதி ஆன இன்று தமிழகத்தில் நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம், ஜூலை 24, 2025: தமிழகத்தில் 2025 ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து மழையின் அளவு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஜூலை மாதம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் அதனை தணிக்கும் வகையில் இரண்டாவது வாரம் முதல் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேனி, கோவை, நீலகிரி, திருநெல்வேலி, ஆகிய மாவட்டங்களில் 3 சென்டிமீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது. அதேபோல மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல் தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 2025 ஜூலை 24ஆம் தேதி ஆன இன்று தமிழகத்தில் நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடரும் கனமழை:
அதேபோல் 2025 ஜூலை 25ஆம் தேதி ஆன நாளை நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 26 ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகபட்ச வெப்பநிலை என்பது 31 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Also Read: கோடை காலத்தில் தப்புமா தமிழகம்..? அணைகளில் இருக்கும் 185 டி.எம்.சி..!
குறையும் வெப்பநிலை:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து வருவதால் வெப்பநிலையின் தாக்கம் என்பது கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை என்பது தொண்டியில் 37.9 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகியுள்ளது. 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவான மதுரையில் 37.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Also Read: மதுரை-கோவை, சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிப்பு..!
சென்னையில் மழை:
சென்னையில் 2025 ஜூலை 23 தேதியான நேற்று மாலை முதல் இரவு நேரம் வரை நகரின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு லேசான முதல் மிதமான மழை பதிவானது. குறிப்பாக சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆலந்தூர், ஆதம்பாக்கம், மேடவாக்கம், கிண்டி, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பதிவானது. இந்த மழை இரவு முழுவதும் விட்டு விட்டு பதிவானதால் வெப்பநிலை என்பது கணிசமாக குறைந்துள்ளது.