தமிழக அரசியலில் பரபரப்பு.. இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் ஐக்கியம்!
Senior CPI leader Mahendran : இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மகேந்திரன் அந்த கட்சியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இந்தக் கட்சியில் இணைந்ததற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அது என்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த மகேந்திரன் இன்று வியாழக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். பனையூர் தமிழக வெற்றிக்காக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மகேந்திரனை பொன்னாடை போர்த்தி வரவேற்றார். இதைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததற்கான காரணத்தை மகேந்திரன் விளக்கினார். அவர் கூறியதாவது: தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய இயக்கமாக வளரும். நான் அரசியலில் மிகவும் வித்தியாசமானவன். தமிழகத்தில் பல்வேறு போராட்டம், ஆர்ப்பாட்டங்கள் காரணமாக சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளேன். எனது 18 வயது முதல் தற்போது வரை கம்யூனிஸ்ட் கட்சிக்காக போராடி உள்ளேன். தமிழக வெற்றிக் கழகத்தில் நான் இணைந்தாலும் சிகப்பு துண்டை போட்டுக் கொண்டே செயல்பட விரும்புகிறேன்.
ஜனநாயக புரட்சியாக கருதுகிறேன்
எனது வாழ்நாள் முழுவதும் சிந்தித்து நிறைவேற்ற முடியாத ஒரு பிரச்சனையான ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையே தமிழகம் முதல்வர் தந்துள்ளார். தேர்தலில் தனி ஆளாக நின்று வெற்றி பெற்று வர முடியும் என்பதை விஜய் உருவாக்கியுள்ளார். வசதி இல்லாத நபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற முடியும் என்பதை தற்போதைய சட்டமன்ற தேர்தல் எடுத்துக்காட்டி உள்ளது. இதனை ஜனநாயகத்தின் ஒரு புரட்சியாக கருதுகிறேன். கட்சி வேறுபாடுகள், மாறுபாடுகள் ஆகியவற்றை கடந்து எளிய மக்களுக்காக ஒரு பெரிய அரசியலை காந்தி மற்றும் பெரியார், அம்பேத்கர் முன்னெடுத்தது போல தமிழக வெற்றி கழகம் வளர வேண்டும்.
மேலும் படிக்க: ஆளுநர் உரையில் தவெக அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் இல்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!




தவெகவில் இணைந்ததற்கான காரணம்
இதற்காக அந்த கட்சி விதை போட்டு உள்ளது. இதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகி, தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டேன். பொதுவுடமையே எனது கொள்கை. இதன் வேர்கள் மேலும் பலப்பட வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து செயல்படுவேன் என்கிற உறுதிபாட்டை எடுத்துள்ளேன்.
கம்யூனிஸ்ட் கட்சியில் துணை செயலராக நீண்ட நாள்கள்
சமூகம் என்பது மேல்தட்டு மக்களுக்காகவும், ஆதிக்கம் மிகுந்தவர்களுக்காகவும் பல்வேறு வசதிகளை செய்து கொடுக்கிறது. தற்போது, ஒடுக்கப்பட்டவர்களுக்கு அரசு நிதி, திட்டம் ஆகியவை விஜய் தலைமையிலான கட்சி கொண்டு போய் சேர்ப்பதற்கான முதல் படியே தொடங்கி வைத்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பாகுபாட்டை ஒழித்துள்ளது என்று தெரிவித்தார். இவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாநில துணை செயலாளராக நீண்ட நாட்கள் பதவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை… தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த்!