மக்கள் நலன் காக்க ஒன்றுதிரளும் இடதுசாரிகள்.. மாபெரும் பேரணி – பொதுக்கூட்டம்.. கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
Left Wing Parties Rally: தமிழக மக்களின் கோரிக்கைகளை வளியுறுத்தி இடது சாரி கட்சிகள் சார்பில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அந்த கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அதன் தலைவர்கள் கூட்டாக தெரிவித்து உள்ளனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட்), ஆகிய இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இந்த கட்சியின் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக மக்கள் எதிர்கொள்ளக்கூடிய முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக 3 இடதுசாரி கட்சிகள் ஒன்றாக செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டது. பெருவாரியான மக்கள் அமைப்புகளின் ஒருங்கிணைந்த மேடையை உருவாக்குவது, இளைஞர், மாணவர், மாதர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், 12 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டு, அந்த குழுவில் இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன், டி. எம். மூர்த்தி, பெரியசாமி, ரவி ஆகியோரும், இந்திய கம்யூனிஸ்ட் சண்முகம், சம்பத், குணசேகரன், சாமுவேல்ராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)
12 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைப்பு
விடுதலை சார்பில் பழ. ஆசை தம்பி, பாலசுந்தரம், சந்திரமோகன் ஆகியோர் இணைக்கப்பட உள்ளனர். இந்த கட்சியை சார்பில் மற்றொரு நபரும் வரும் நாட்களில் இணைக்கப்படுவார். இந்த ஒருங்கிணைப்பு குழுவுக்கான செயல் திட்டத்தை தயாரித்து அடுத்த கூட்டத்தில் ஒப்புதலுக்காக முன் வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளிட்டோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: “கோட் சூட், டிபன் பாக்ஸ் செய்திகள் முக்கியமல்ல!”.. ஆட்சியில் நடப்பதை கவனியுங்கள்.. முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை!




இடது சாரி கட்சிகள் சார்பில் பேரணி – பொதுக்கூட்டம்
வருகிற ஜூலை மாதம் 20- ஆம் தேதி ஒருங்கிணைப்பு குழுவின் அடுத்த கூட்டத்தை நடத்துவது, இடதுசாரி கட்சிகளின் வர்க்க, வெகு மக்கள் அமைப்புகளின் விரிவடைந்த கூட்டத்தை ஜூலை 10- ஆம் தேதி சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்ச செயல்திட்டம், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் மாத கடைசியில் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பிரம்மாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
இடதுசாரி ஒருங்கிணைப்பு குழு எவ்வாறு செயல்படும்
இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு என்பது தேர்தலுக்கான கூட்டணி மட்டும் இன்றி, மக்கள் பிரச்சினைகளுக்கு போராடுவதற்கான, தமிழ்நாட்டின் எதிர்கால திசை, வழி இடதுசாரிகளின் பக்கம் திருப்புவதற்கான, மாற்று அரசியல் திசைவழி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான இயக்கம் ஆகும். தற்போதைய முதலாளித்துவ சமூக பொருளாதார அமைப்புக்கு மாற்று சோசியலிசம் தான் என்ற நம்பிக்கையை உருவாக்கும் வகையில் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: தவெக அரசின் இயலாமையை மறைக்கவே வெள்ளை அறிக்கை.. தங்கம் தென்னரசு தாக்கு!