AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மதுரைக்கு ரூ. 3,500 கட்டணமா? தொடர் விடுமுறை – ஆம்னி பேருந்துகள் கட்டணம் பல மடங்கு உயர்வு

காந்தி ஜெயந்தி, வார விடுமுறை முடிந்து ஞாயிறு இரவு ஊர் திரும்புவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.4,500, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.6,500 ஆகவும் உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மதுரைக்கு ரூ. 3,500 கட்டணமா? தொடர் விடுமுறை –  ஆம்னி பேருந்துகள் கட்டணம் பல மடங்கு உயர்வு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 30 Sep 2026 11:32 AM IST

சென்னை, செப்டம்பர் 30 : காந்தி ஜெயந்தி, வார விடுமுறை முடிந்து ஞாயிறு இரவு ஊர் திரும்புவதற்கான ஆம்னி பஸ் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.4,500, நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு ரூ.6,500 ஆகவும், திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு ரூ.6,500 ஆகவும், கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு ரூ.6,000 வரையும் ஆம்னி பேருந்து கட்டணமாக வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகள் கட்டணம் பல மடங்கு உயர்வு

மேலும் ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகைகளை ஒட்டி தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யத் தொடங்கியுள்ளனர். ஆனால், பண்டிகைக் கால தேவையைப் பயன்படுத்திக்கொண்டு பல வழித்தடங்களில் ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிக்க : ஜெம் வீரமணி நினைத்தாலும் தப்ப முடியாது.. அடுத்தடுத்து பாயும் பாலியல் புகார்கள்.. குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்!

முன்பதிவுத் தளங்களில் உள்ள விவரங்களின்படி, சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு அதிகபட்சமாக ரூ.4,999 வரையும், ஊட்டிக்கு ரூ.3,500 வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களான நாகர்கோவில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் ரூ.3,000க்கும் அதிகமாகக் கட்டணம் உள்ளது. குறிப்பாக மதுரை, திருச்சி, கோவை, திருப்பூர், கோவில்பட்டி, விருதுநகர் போன்ற ஊர்களுக்கு கட்டணம் சுமார் ரூ.3,000 வரை எகிறியுள்ளது. இதே வழித்தடங்களில் சாதாரண நாட்களில் ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இப்போது அது ரூ.3,500க்கும் மேல் உயர்ந்துள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். .

அதனைத் தொடர்ந்து ஆயுத பூஜை விடுமுறை முடிந்து அக்டோபர் 20, 21, 2026 ஆகிய தேதிகளில் சென்னை திரும்பவும் அதிக அளவில் டிக்கெட்டுகள் முன்பதிவாகி வருகின்றன. ஊருக்குச் செல்வது மட்டுமல்ல, திரும்பி வருவதற்கான கட்டணமும் சில வழித்தடங்களில் ரூ.3,200 வரை உயர்ந்திருப்பது முன்பதிவு விவரங்களில் தெரியவந்துள்ளது.

வேலை, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களை விட்டு சென்னையில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி, பொங்கல் போன்ற தொடர் விடுமுறை நாட்களில் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல அதிகம் தேர்ந்தெடுப்பது பேரந்துகளைத் தான். ஏனெனில் பண்டிகை காலங்களில் இரயில் டிக்கெட்கள் 3 மாதங்களுக்கு முன்பே புக்காகி விடும். அதேநேரம் ஆம்னி பேருந்துகளில் எந்த நேரத்தில் சென்றாலும் டிக்கெட் கிடைக்கும் என்பதால் பெரும்பாலானவர்கள் இதையே விரும்புகின்றனர்.

இதையும் படிக்க : விஜய் நடித்த ‘லியோ’ கஃபே.. ஜம்மு காஷ்மீரில் இப்போ இதுதான் டிரெண்டிங்.. குவிந்து வரும் ரசிகர்கள்!

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பண்டிகை காலங்களில் டிக்கெட்டி விலையை இரண்டு மடங்காக உயர்த்தி விடுகின்றனர். அதனாலேயே சாதாரண நாட்களை விட பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து விடுகிறது.

Follow Us