1.5 கோடி ரேஷன் கார்டுகள் நாளை முடக்கம்… மத்திய அரசு திடீர் அறிவிப்பு.. என்ன காரணம்!
1.5 Crore Ration Cards Deactivated : நாட்டில் 6 மாதங்களுக்கு மேலாக ரேஷன் கடைகளில் பொருள்கள் வாங்காத 1 கோடியே 50 லட்சம் ரேஷன் குடும்ப அட்டைகள் நாளை முதல் நீக்கம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் தகுதியான குடும்பத்தினருக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் ரேசன் பொருட்களை பெறுவதற்காக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுமார் 20 கோடியே 4 லட்சம் ரேசன் கார்டுகள் மூலமாக 80 கோடியே 6 லட்சம் பேர் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு அரசின் பயன்கள் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அவ்வப்போது ரேஷன் கார்டுகள் மற்றும் பயனாளிகளின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கடந்த 6 மாதங்களாக ரேஷன் பொருட்களை பெறாத ரேஷன் கார்டுகளுடன் தொடர்புடைய 1.58 கோடி பயனாளிகளின் சலுகைகளை நாளை ( அக்டோபர் 1- ஆம் தேதி) முதல் தற்காலிகமாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 3 மாத அவகாசம்
இதில், சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுகள் முதலில் தற்காலிகமாக முடக்கப்படும். அவர்களின் பெயர்கள் ரேஷன் தரவு தளத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட மாட்டாது. ஆனால், எதிர்வரும் 3 மாதங்களுக்குள் தங்களது தகுதியை ரேஷன் அட்டைதாரர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதற்காக, இ கேஒய்சி நடைமுறையை குடும்ப அட்டைதாரர்கள் மேற்கொள்ள வேண்டும். இதற்காக, தேவைப்படும் இடங்களில் கள ஆய்வும் நடத்தப்பட உள்ளது. இதில், தகுதி உறுதி செய்யப்பட்டால், ரேஷன் கார்டு மீண்டும் செயல்படுத்தப்பட்டு உணவு தானியங்கள் வழங்கப்படும்.
மேலும் படிக்க: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்.. ஆயுதப்படை காவலர் திடீர் மரணம்.. சோகத்தில் முடிந்த கதை!




உணவு பொருள் வீணாவது- முறைகேடு தடுப்பு
எனவே, ரேஷன் கார்டுகளை உடனடியாக ரத்து செய்யாமல், முதலில் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு தகுதியை உறுதி செய்ய வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையின் மூலமாக உண்மையான பயனாளிகளுக்கு உணவு மற்றும் தானியங்கள் சென்றடையும். அத்துடன், உணவு பொருட்கள் வீணாவது மற்றும் முறைகேடு செய்யப்படுவது குறையும் என்று மத்திய அரசு கருதுகிறது. ரேஷன் கார்டு தரவுகள் கணினி மயமாக்கப்பட்டு வருகிறது. அத்துடன், ஆதார் இணைப்பு, இ. கே. ஒய். சி. உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
5.8 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கம்
கடந்த 2024- ஆம் நவம்பர் மாதம் சுமார் 5.8 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஜூலை 30- ஆம் தேதி நிலவரப்படி ரேஷன் கார்டுகளுக்கான இ கேஒய்சி பணிகள் 90.64 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மத்திய உணவு துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 6 மாதங்களாக பொருட்கள் வாங்காத அட்டைதாரர்கள் உடனடியாக ரேசன் பொருட்களை வாங்கி தங்களது கார்டு முடக்கப்படுவதை தவிர்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க: ஜெம் வீரமணி நினைத்தாலும் தப்ப முடியாது.. அடுத்தடுத்து பாயும் பாலியல் புகார்கள்.. குண்டர் சட்டத்தில் அடைக்க திட்டம்!