மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை – லட்சக்கணக்கான விவசாயிகள் ஏமாற்றம்
மேட்டூர் அணையின் நீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. இந்த நிலையில், மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12, 2026 இன்று நீர் திறக்கப்படாத நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.
சேலம், ஜூன் 12 : மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12, 2026 இன்று நீர் திறக்கப்படாத நிலையில் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர். மேட்டூர் அணையின் நீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் உள்ள 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறுகின்றன. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12, 2026 முதல் ஜனவரி 28 வரை பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவது வழக்கம். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் குறுவை பாசனத்திற்கு நீர் திறக்கப்படுவது வழக்கம்.
மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு இல்லை
இந்த நிலையில் ஜூன் 12, 2026 இன்று மேட்டூர் அணையில் இருந்து இந்த 2026 ஆம் ஆண்டுக்கான நீர் திறக்கப்பட வேண்டும் என்ற நிலையில் திறக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது. தற்போது மேட்டூர் அணையில் நீர் திறக்க 90 அடி அளவுக்கு நீர் இருக்க வேண்டும் என்ற நிலையில் தற்போது 79.62 அடி மட்டும் நீர் இருந்தது. அதே போல அணைக்கு நீர்வரத்து 424 அடியாக இருந்தது. அணைக்கு நீர் வரத்து குறைவாக இருந்த காரணத்தால் இந்த 2026 ஆம் ஆண்டுக்கான நீர் ஜூன் 12, 2026 இன்று திறக்கப்படவில்லை. இந்த நிலைில் மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படாத நிலையில் குறுவை சாகுபடி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் விவசாயத்தை நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : அரசு மருத்துவமனையில் ஓபி சீட்டுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம்.. வீட்டில் இருந்தே முன்பதிவு செய்யலாம்.. அமைச்சர் அருண்ராஜ் குட்நியூஸ்!
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் காவிரி நீர் பகுதிகளில் கனமழை பெய்து கர்நாடக மாநலம் கபினி அணை நிரம்பிய பிறகு அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் தஇறக்கப்படும். ஆனால் இந்த முறை கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
இந்த நிலையில் மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படாதது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை நீர் இந்த ஆண்டு திறக்கப்படாததால் விவசாிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளைக்கியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.
குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 12, 2026
குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது. ஏற்கனவே விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் ரூ. 10,000 கோடிக்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்துக்குத் தள்ளிவிட்டுள்ள இன்றைய அரசு, தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ. 134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இதையும் படிக்க : மீண்டும் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு? தமிழக அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!!
மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணிநேரமாகக் குறைத்து அறிவித்துள்ளது இன்றைய அரசு.
ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது. இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம்கூட புரியாமல் இன்றைய அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விவசாயிகள் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறோம்” என்று கூறியுள்ளார்.