முதல்வர் விஜய்க்கு எதிராக போட்டியிட்டவர்… தவெகவில் ஐக்கியம்
அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் க. ராஜசேகரன் என்பவர் ஜூலை 2, 2026 இன்று அதிமுகவில் இணைந்தார்.
சென்னை, ஜூலை 2 : அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தனர். இந்த நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரன் என்பவர் ஜூலை 2, 2026 இன்று அதிமுகவில் இணைந்தார். அவர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியுள்ள கடிதத்தில், மிகுந்த மனவலியுடன் அதிகமுகவில் இருந்து விலகவதாக குறிப்பிட்டுள்ளார்.
தவெகவில் இணைந்த விஜய்க்கு எதிராக போட்டியிட்டவர்
திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய்யை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் க.ராஜசேகரன் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார். இந்த நிலையில் அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அவரது கடிதத்தில், அரசியல் கொள்கை சார்ந்த நிலைப்பாடுகள். மக்கள் நலன் குறித்த எனது பார்வை. எதிர்கால பொது வாழ்க்கைப் பயணத்தை முன்னிறுத்தி, ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகு கனத்த இதயத்துடனும், கலங்கிய மனத்துடனும் எம்.ஜி.ஆர். தோற்றுவித்த, ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட மகத்தான இயக்கத்தின் திருச்சி மாநகர் மாவட்ட பொருளாளர் பொறுப்பு உள்ளிட்ட கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், இன்றைய தினம் முதல் மனவலியுடன் விலகுகின்றேன் என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.




இதையும் படிக்க : “முதல்வர் விஜய் கரூர் செல்வதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய சதி”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!!
அதிமுகவில் இணைந்த சி.விஜயபாஸ்கர் பேசியதாவது, புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கருத்துக்களை கேட்ட பிறகே அடிப்படையில் தவெகவில் இணையும் முடிவை நாங்கள் எடுத்துள்ளோம். தவெக உடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று, தேர்தலுக்கு முன்னதாகவே நாங்கள் எங்கள் தலைமையிடம் கடுமையாக வலியுறுத்தினோம். தலைமை செவி மடுக்கவில்லை. தேர்தலுக்குப் பின்னரும், தமிழக மக்கள் ஏகோபித்த ஆதரவை தவெகவுக்கு வழங்கி இருக்கிறாரகள். எனவே, நாம் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அதையும் தலைமை கேட்கவில்லை.
இதையும் படிக்க : முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு.. மறுபரிசீலனை செய்யுமாறு வைத்த கோரிக்கை.. முழு விவரம்!!
மேலும் பேசிய அவர், எம்ஜிஆரால் தீய சக்தி என அடையாளம் காட்டப்பட்ட திமுகவோடு கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி முயன்றதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், எதிர்கொண்ட முதல் தேர்தலிலேயே ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்து, தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானித்து, அண்டை மாநிலங்களை அதிரவைத்திருக்கும் மக்கள் விரும்பிய மாற்றத்தின் சக்தி நமது முதல்வர் விஜய். தமிழக அரசியலில் சத்தமின்றி மவுனப் புரட்சியாக மாபெரும் அரசியல் புரட்சியை நிகழ்த்தியவர் விஜய். தமிழக மக்களை தனது நெஞ்சிலே குடியமர்த்தி இருக்கும் ஒரு தலைவரை நாம் பெற்றிருக்கிறோம் என்று பேசினார்.