AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க 6 முக்கிய வழிகள்.. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன்!

Finance Minister Maria Wilson : தமிழக அரசின் கடன் சுமையை குறைப்பதற்கு 6 முக்கிய காரணிகளை தமிழக வெற்றிக் கழக அரசின் நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். நிதி நிலை தொடர்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க 6 முக்கிய வழிகள்.. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன்!
கடன் சுமையை குறைக்க 6 முக்கிய நடவடிக்கை
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 16 Jun 2026 20:59 PM IST

தமிழக அரசின் நிதிநிலை தொடர்பாக நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார். இதில், தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை ரூ.13.18 லட்சம் கோடி, நேரடி கடன் ரூ.10 லட்சம் கோடி, வருவாய் பற்றாக்குறை ரூ.78,324 கோடி, தனிநபர் கடன் ரூ.1,28,934 உள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த கடன் சுமையை குறைக்கவும், வருவாயே பெருக்கவும் 6 வழிகளை தவெக அரசு முன்மொழிந்துள்ளது. அதில்,

மேலும் படிக்க: திமுக-வால் தான் தேர்தலில் தோற்று விட்டோம்.. காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பெரும் குற்றச்சாட்டு!

  • ஊழலற்ற நிர்வாகத்தின் வாயிலாக வருவாய் இழப்புகளை சரி செய்தல்:- வணிக வரிகள், முத்திரைத்தாள், பத்திரப்பதிவு, ஆயத்தீர்வை, கனிம வளம் ஆகியவற்றில் உள்ள அமைப்பு ரீதியான ஊழல், நிர்வாக சீர்கேட்டால் கணிசமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகம் வாயிலாக ரூ.20 ஆயிரம் கோடி கூடுதல் நிதி வரவை ஏற்படுத்தலாம் என்று கணிப்பு, நிதி இழப்புகளை சரி செய்தாலே சொந்த வரி கட்டும் திறன் பெருமளவு மேம்படும்.
  • அரசு கொள்முதலின் செலவை குறைத்தல்:- பொது கொள்முதல், ஒப்பந்த புள்ளிகளில் ஏற்படும் நிதி இழப்புகளை குறைப்பதன் மூலம் பெருமளவிலான நிதியே பெறலாம். மேம்பட்ட ஒப்பந்த மேலாண்மை, போட்டித் தன்மை ஆகிய ஒப்பந்த புள்ளி கோரல், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் செலவிடப்படும் ரூபாய்க்கும் கூடுதல் மதிப்பை பெற வழிவகை செய்யும்.
  • பொதுத்துறை நிறுவன சீர்திருத்தம்- கட்டமைப்பு சார்ந்தது மானியம் அல்ல:- மின்சாரம்: செயல்பாட்டுத் திறன், நிலையான கட்டண முறை. போக்குவரத்துக் கழகங்கள்: பயண கட்டணம் இல்லாத வருவாய், வழித்தட இயங்கு திறன். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம்: குறித்த நேரத்தில் மானியங்களை விடுவித்தல், கொள்முதல் சீர்திருத்தம், கடன் அளவு, நிலுவை உத்தரவாதங்களை குறைக்க வழிவகை செய்யும், கட்டமைப்பு சீர்திருத்தம்.
  • அதிகாரங்களை பயன்படுத்தி வருவாய் திரட்டல்:- சந்தை மதிப்புடன் வழிகாட்டுதல் மதிப்பை சீரமைத்தல். விரிவான ஆயத்தீர்வை உரிமை கட்டமைப்பு. கனிம வளங்கள்: நிர்வாகத்தை நவீன மயமாக்குதல், முழுமையான அரசின் அதிகார வரம்புக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல், புதிய வரிகளுக்கான தேவையில்லை. குடிமக்களுக்கு கூடுதல் வரி சுமை இல்லை.
  • செலவின் தரம்- நுகர்வைவிட மூலதனம்:- வருவாய் செலவினங்களில் இருந்து மூலதன செலவினங்களுக்கு படிப்படியாக மறு சமநிலைப்படுத்துதல், 2030- ஆம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய தனியார் முதலீட்டை ஈர்க்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் மூலதன செலவினம் மேற்கொள்ளப்படும்.
  • நேர்மை, நம்பிக்கையான வரவு- செலவு திட்டமிடல்:- தலைமை கணக்காய்வு, தணிக்கை துறை தலைவரால் சுட்டிக்காட்டப்பட்ட வரவு, செலவு திட்ட மதிப்பீட்டிற்கும், இறுதி கணக்குகளுக்கும் இடையிலான வேறுபாட்டை குறைக்க உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பயிர் கடன் தள்ளுபடி விவகாரம்.. தவெக அரசு எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படுகிறது.. எடப்பாடி குற்றச்சாட்டு!

Follow Us