AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அதிமுகவுடன் கூட்டணிக்கு தவெக தயாராக இருந்தது – சி.வி.சண்முகம் பரபரப்பு தகவல்

TVK AIADMK Alliance Claim : சி.வி சண்முகம் தலைமையிலான தவெக ஆதரவு எம்எல்ஏகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சி.வி.சண்முகம், தேர்தலுக்கு கடைசி நேரத்தில் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க தயாராக இருந்தது. தவெக முன்வந்தபோது அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்று தெரிவித்தார்.

அதிமுகவுடன் கூட்டணிக்கு தவெக தயாராக இருந்தது – சி.வி.சண்முகம் பரபரப்பு தகவல்
எடப்பாடி பழனிசாமி - சி.வி.சண்முகம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 May 2026 21:50 PM IST

சென்னை, மே 13 : கடந்த சில நாட்களாக நிலவி வந்த பரபரப்புகளுக்கு மத்தியில் சட்டமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் பிற கட்சிகளின் எம்எல்ஏகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்தது. குறிப்பாக அதிமுகவை சேர்ந்த ஒரு பகுதி எம்எல்ஏகளின் ஆதரவும் தவெகவுக்கு கிடைத்தது. இது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தவெகவுக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏகளை கட்சிப் பொறுப்புகளில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கினார். இது அரசியலில் மேலும் பரபரப்பை அதிகரித்தது.

‘அதிமுகவுடன் கூட்டணிக்கு தவெக தயாராக இருந்தது’

இந்த நிலையில் சி.வி சண்முகம் தலைமையிலான தவெக ஆதரவு எம்எல்ஏகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சி.வி.சண்முகம், தேர்தலுக்கு கடைசி நேரத்தில் அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்க தயாராக இருந்தது. தவெக முன்வந்தபோது அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

இதையும் படிக்க : அதிரடிக்கு பெயர்போன அஸ்ராக் கார்க்.. தமிழக உளவுத்துறை ஐ.ஜி-ஆக நியமனம்!

இதுவரை அதிமுக பல தேர்தல்களில் தோற்றாலும் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. அதற்கு தலைவர்களே காரணம். தோற்றால் நிர்வாகிகள் மீதும், வெற்றி பெற்றால் தான் காரணம் என்று  கூறுவதும் எந்த விதத்தில் சரியாகும்?  மேலும், கடந்த  2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றோம். ஆனால் அதனை எடப்பாடி பழனிசாமி காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. பின்னர் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தார்.

சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி

 

அதற்கான காரணத்தை தற்போது வரை அவர் கூறவில்லை. மேலும், தேமுதிகவுடன் கூட்டணி வைக்கலாம் என  நாங்கள் சொன்னதற்கு அவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதேபோல், தேமுதிகவுக்கு வாக்குறுதி அளித்துவிட்டு மாநிலங்களவை எம்.பி. சீட்டை எடப்பாடி பழனிசாமி கொடுக்கவில்லை. தேமுதிகவுக்கு கொடுக்காதது தவறு என்று நாங்கள் கூறினோம், ஈபிஎஸ் கேட்கவில்லை.

இதையும் படிக்க : தவெக வெற்றியின் வீச்சு கொளத்தூர் தேர்தல் முடிவுகளை பார்த்துமா புரியவில்லை.. முதல்வர் விஜய் கடும் தாக்கு!

என்றைக்கு கட்சிக்குள் முரண் வந்து பிளவை நோக்கி சென்றதோ அன்றே பொதுச்செயலாளருக்கான அதிகாரமும் பறிக்கப்பட்டுவிட்டது. எங்களை நீக்கும் அதிகாரம் அவருக்கு கிடையாது.  எனவே அவர் எங்களை பதவி நீக்கம் செய்தது செல்லாது. தேர்தல் தோல்வி குறித்து ஆலோசித்து இயக்கத்தை வலுப்படுத்த வேண்டும், அதற்கு பொதுக் குழுவை கூட்டச் சொல்லி தெரிவித்துவிட்டோம். எனவே இதன் பிறகு எங்களை நீக்குவது கழக சட்ட விதிகளுக்கு புறமானது. நீங்கள் அல்ல கடவுளே தடுத்தாலும் பொதுக் குழுவில் நாங்கள் பங்கேற்போம். அதனை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

Follow Us