முதல்வர் விஜய்யின் சைகைக்கு வலுக்கும் எதிர்ப்புகள்.. இந்திய கம்யூ. வீரபாண்டியன் பரபர கருத்து!
CPI Secretary Veerapandian : தமிழக சட்டப் பேரவையில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசியதுடன், சைகை காண்பித்த முதல்வர் விஜய்யின் செயலை இந்திய கம்யூன்ஸ்டி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார் .
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உள்ள ரெட்டியபட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் பங்கேற்று இருந்தார். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் உள்ள சட்டப் பேரவைகளில் பெரிய பாரம்பரியம் மற்றும் புகழ்பெற்றதுமாக தமிழக சட்டப்பேரவை விளங்கி வருகிறது. மக்கள் அதிகாரத்தின் இறையாண்மையை வெளிப்படுத்தும் விதமான சட்டப்பேரவையே கடந்த முறை ஆளுநர் அலட்சியப்படுத்தி இருந்தார். சட்டப்பேரவையில் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்க கூடாது. உடல் மொழி மூலமாகவோ, தரம் தாழ்ந்த வார்த்தைகள் மூலமாகவோ தாக்குதல் நடத்துவது ஜனநாயக மரபுகளுக்கு எதிரானதாகும்.
உயரந்த பொறுப்பில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டும்
எனவே, உயர்ந்த பொறுப்புகளில் இருப்பவர்கள் கூடுதல் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தந்தையே தேடுகிறேன் என முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கூறியது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். இதே போல, அதற்கு பதில் அளிக்கும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல் அமைச்சர் விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசியதும் சரியானது அல்ல. தமிழகத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன. இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைவரும் இணைந்து ஒன்றாக செயல்பட வேண்டும் என்பதே கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடாகும்.
மேலும் படிக்க: திமுகவின் நிலையால் மன வருத்தம்.. சென்னையில் நிர்வாகி தூக்கு போட்டு தற்கொலை.. பகீர் சம்பவம்!




ஜனநாயக சக்திகளுன் தொடர்ந்து பயணிப்போம்
மாநிலங்களின் உரிமைகளை எந்த சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது. மதச்சார்பின்மை கொள்கையே முதல்வர் விஜய் தொடர்ந்து கடைபிடிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் மட்டும் இன்றி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டுள்ளது. வரும் காலத்தில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து பயணிப்போம் என்று தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் விமர்சித்த முதல்வர் விஜய்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலினை, சிறுவனின் தந்தையே முதியோர் தேடுவது போன்ற கதையை கூறி முதல்வர் ஜோசப் விஜய் விமர்சித்து இருந்தார். அத்துடன், 5 நிமிடம் பேசியதற்கே கொளத்தூர் தொகுதி ஆட்டம் கண்டு விட்டது. மேலும், பேசு பேசு என்று கூறினால் என்ன செய்வது என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.
முதல்வர் வாழ்க்கையை விமர்சித்த உதயநிதி
இதற்கு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவகாரத்து வழக்கு தொடர்பாக கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இதனை கண்டிக்கும் விதமாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: மின்சாரத் துறைக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்.. நாளை வெள்ளை அறிக்கை வெளியீடு.. சி.டி.ஆர்.நிர்மல்குமார் ஸ்கெட்ச்!