7 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை – இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்
Child Assault Case : மக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை மடக்கி பிடித்த அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நாமக்கல், மார்ச் 7 : நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை மடக்கி பிடித்த அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 7 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு வந்த சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கட்டிட தொழிலாளி சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இந்த நிலையில் சிறுமி அழுதபடியே வீட்டிற்கு வந்த நிலையில், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உண்மை தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து குற்றவாளியை தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கட்டிடத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அங்கு சென்ற மக்கள், அந்த இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்த அப்பகுதி மக்கள் அவரை நேரடியாக போலீஸில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
இந்த நிலையில் இந்த சம்பவ் தொடர்பான தகவல் அந்த பகுதியில் விரைவாக பரவியது. இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் திருச்செங்கோடு மகளிர் காவல்நிலையம் முன்பு குவிந்தனர். மேலும் அந்த நபரை தங்களிடம் ஒப்படைக்க கோரி காவல்நிலையத்தை அவர்கள் முற்றுகையிட்டதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. இதனயைடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு நிலவியது.




இதையும் படிக்க : “இன்னும் 2 வாரத்தில் ஊழலில் சிக்கிய அமைச்சர் சிறைக்கு செல்வார்”.. பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்!!
இதே போல சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுச்சேரி, கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த சீனிவாசன் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி 14 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். பின்னர், அதை யாரிடமும் சொல்லக்கூடாது என, மிரட்டியிருக்கிறார்.
இந்த நிலையில் சிறுமியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரிடம் பெற்றோர் விசாரித்ததில் உண்மையை சொல்லியிருக்கிறார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் தெரிவித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் அவர் மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க : திருடிய பிறகு போலீசாரிடம் லிப்ட் கேட்ட நபர்… கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் – தூத்துக்குடியில் பரபரப்பு
இந்த வழக்கு விசாரணை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து விதமான விசாரணைகளும் முடிந்த நிலையில் கடந்த மார்ச் 6, 2026 அன்று தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றவாளி சீனிவாசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம்
விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக அரசு ரூ. 4 லட்சம் வழங்க வேண்டுமெனவும் தீர்ப்பு வழங்கப்பட்டது. .