சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. ஜோதிடருக்கு 200 ஆண்டுகள் சிறை.. அதிரடி தீர்ப்பு!!
200 years prison for astrologer: விசாரணையின் முடிவில், நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, இரண்டு சிறுமிகளையும் பூஜை செய்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு, அவர்களது உடல்நலம் பாதிப்படைய முக்கிய காரணமாக இருந்ததால், 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை, பிப்ரவரி 24: படிப்பில் முன்னேற்றம் பெறும் வகையில் பரிகார பூஜை நடத்துவதாக கூறி, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய ஜோதிடருக்கு, சிவகங்கை போக்சோ நீதிமன்றம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானகிரி பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (52) என்பவர் ஜோதிடம் மற்றும் பரிகார பூஜைகள் செய்து வருவதாக கூறி வந்தார். 2021ஆம் ஆண்டு, தனது 17 மற்றும் 14 வயது மகள்கள் சரியாக படிப்பதில்லை என்பதால், அவர்கள் நல்ல வேலைக்கு செல்ல ஏதேனும் பரிகாரம் உள்ளதா என ஒரு பெண் அவரை அணுகியுள்ளார்.
இதையும் படிக்க: வீடு தேடி வந்த விபரீதம்.. வாடகைக்கு குடியேறிய போலி மருத்துவர் நூதன மோசடி.. நகை, பணத்தை இழந்த குடும்பம்..
சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை:
இதற்கு சில பரிகார பூஜைகள் செய்யலாம் என கூறிய ராமகிருஷ்ணன், அந்த பெண்ணையும், அவரது மகள்களையும் தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதன்படி, நவம்பர் மாதத்தில் அவர்கள் மானகிரியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு, அந்த பெண்ணை ஒரு அறையில் தனியாக வைத்து, ஒரு விளக்கை அணையாமல் பார்த்துக்கொள்ளுமாறு கவனிக்கச் சொல்லியுள்ளார். இரண்டு சிறுமிகளையும் வேறு ஒரு அறைக்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொண்டு, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமிகளுக்கு உடல்நலப் பிரச்சினை:
இந்த சம்பவம் நடந்து சில நாட்கள் கழித்து, அந்த இரண்டு சிறுமிகளுக்கும் உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, மருத்துவ பரிசோதனையின் போது ஜோதிடர் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததை வெளிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து, திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நீதிபதி கோகுல் முருகன் வழக்கை விசாரித்தார்.
200 ஆண்டுகள் சிறை தண்டனை:
விசாரணையின் முடிவில், நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, இரண்டு சிறுமிகளையும் பூஜை செய்வதாக கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு, அவர்களது உடல்நலம் பாதிப்படைய முக்கிய காரணமாக இருந்துள்ளார். எனவே, 2 சிறுமிகளுக்கும் செய்த குற்றத்திற்காக தலா 100 ஆண்டுகள் வீதம், மொத்தம் 200 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இதையும் படிக்க: குடும்பத்தையே சீர்குலைத்த புற்றுநோய்.. மனைவி மீதான அதீத பாசத்தால் விபரீத முடிவு.. தந்தை, மகன் பலி!!
மற்றொரு வழக்கில் இன்று தீர்ப்பு:
மேலும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. அதோடு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சிறுமிக்கும் ரூ.10 லட்சம் வீதம், மொத்தம் ரூ.20 லட்சம் அரசு இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதோடு, இதேபோன்ற மற்றொரு பாலியல் குற்ற வழக்கிலும் ராமகிருஷ்ணன் மீது குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு இன்று (பிப்.24) வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.