AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருடிய பிறகு போலீசாரிடம் லிப்ட் கேட்ட நபர்… கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் – தூத்துக்குடியில் பரபரப்பு

Strange Theft Incident : தூத்துக்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகையை பறித்த திருடன், தப்பிக்க முயற்சத்த போது, போலீஸிடமே லிப்ட் கேட்டு சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

திருடிய பிறகு போலீசாரிடம் லிப்ட் கேட்ட நபர்… கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் – தூத்துக்குடியில் பரபரப்பு
போலீஸிடம் சிக்கிய திருடன் சசிகுமார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 07 Mar 2026 15:39 PM IST

தூத்துக்குடி, மார்ச் 7 : வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் இருந்து கத்தியைக் காட்டி மிரட்டிய திருடன், போலீஸிடமே லிப்ட் கேட்டு சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள சிவஜோதி நகர் பகுதியில் வசித்து வருபவர் மகாராஜன். இவர் ஷிப்பிங் கம்பெனி நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மார்ச் 6, 2026 அன்று மகாராஜனின் மனைவி சிவகமலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை தெரிந்துகொண்ட திருடன், அவரது வீட்டிற்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி அவர் அணிந்திரு்த 7 சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு ஓட முயற்சித்துள்ளார். அப்போது சிவகமலா திருடனின் கையைக் கடித்து காயம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

திருடிய பிறகு போலீசாரிடமே லிப்ட் கேட்ட நபர்

இருந்தும் திருடன் அவரிடம் இருந்து தப்பித்து தங்க செயினை பறித்துக் கொண்டு ஓடியிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக சிப்காட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து உடனடியாக சம்பவம் இடத்துக்கு வந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து குற்றவாளியின் போட்டோவை வாட்ஸ் அப் குழுவில் மற்ற காவலர்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க : திருடப்போன இடத்தில் அசந்து தூங்கிய கொள்ளையன்.. ‘லேடீஸ் ஜீன்ஸ்’ அணிந்து தப்பியோடிய விநோதம்..

இந்த நிலையில் தூத்துக்குடி பசும்பொன் நகர் பகுதி வழியாக சென்று கொண்டிருந்த காவல்துறை உதவி ஆய்வாளர் பிரேம்குமாரிடம் ஒருவர் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது அவரது கையில் கடிபட்ட காயம் இருந்துள்ளது. இதனை பார்த்து சந்தேகமடைந்த பிரேம்குமார் வாட்ஸ்அப் குழுவில் உள்ள போட்டோவை பார்த்த பிறகு சந்தேகம் மேலும் வலுத்துள்ளது. இதனையடுத்து உதவி ஆய்வாளர், இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், கையும் களவுமாக சிக்கிய நபரை பிடித்து விசாரணை செய்தனர்.

இதையும் படிக்க :  சுட்டெரிக்கும் சூரியன்.. 100 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவான வெப்பநிலை..

விசாரணையில் அவர் தூத்துக்குடி டிஎம்பி காலனியை சேர்ந்த சசிகுமார் என்பது தெரியவந்தது. கான்கிரீட் வேலை செய்பவர் போல, வீடுகளை நோட்டமிட்டு ஆட்கள் குறைவாக இருக்கும் வீடுகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் குற்றத்தை உறுதிசெய்த போலீசார், சசிகுமார் வைத்திருந்த தாலி செயினை பறிமுதல் செய்து அவர் மீது வழங்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதே போல கன்னியாகுமரியில் மெத்தையைப் பார்த்ததும் திருட வந்ததை மறந்து ஆளில்லாத வீட்டில் அசந்து தூங்கிய கொள்ளையன், போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Follow Us