AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கவிஞர் புவியரசுவின் உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு

கோவையில் மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். அவரது பதிவில், கவிஞரும் எழுத்தாளருமான புவியரசு மறைவால் வேதனை அடைந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார்.

கவிஞர் புவியரசுவின் உடலுக்கு அரசு மரியாதை – முதல்வர் விஜய் அறிவிப்பு
கவிஞர் புவியரசு - முதல்வர் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 Jul 2026 10:04 AM IST

சென்னை, ஜூலை 1 : கோவையில் மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும் எழுத்தாளருமான புவியரசு மறைவால் வேதனை அடைந்தேன். சமூக பொறுப்பை வலியுறுத்தும் கவிதைகள், உலக இலக்கிய மொழிபெயர்ப்பில் முத்திரை பதித்தவர் புவியரசு. புவியரசு மறைவால் வாடும் குடும்பத்தார், இலக்கிய உலகைச் சேர்ந்தோருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் புவியரசுவின் உடலுக்கு அரசு மரியாதை

இது தொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட பதிவில், சாகித்ய அகாதமி விருது பெற்ற கவிஞரும், எழுத்தாளருமான புவியரசு மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சமூகப் பொறுப்பை வலியுறுத்துகின்ற கவிதைகளாலும், உலக இலக்கியச் செல்வங்களைத் தமிழுக்குக் கொண்டுவந்த மொழிபெயர்ப்புகளாலும் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் புவியரசு.‘கையொப்பம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக தமிழுக்கான சாகித்ய அகாதமி விருது, ’புரட்சிக்காரன்’ என்ற மொழிபெயர்ப்பு நூலிற்காக மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இதையும் படிக்க : “2 சீட்டுனு கிண்டல் பண்ணாங்க.. இப்போ அருமை புரியுதா?”.. திமுகவை சீண்டிய திருமாவளவன்?

கவிஞர் புவியரசு அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ் இலக்கிய உலகைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இலக்கியத் துறையில் திரு. புவியரசு அவர்களின் பங்களிப்பைப் போற்றி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் விஜய்யின் பதிவு

 

இதையும் படிக்க : திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கவிஞர் புவியரசு

புகழ்பெற்ற கவிஞரும், 2 முறை சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளருமான கவிஞர் புவியரசு உடல் நலக்குறைவு காரணமாக ஜூன் 30, 2026 நேற்று காலமானார். அவருக்கு வயது 96. ஜெகநாதன் என்ற இயற்பெயற் கொண்ட அவர், கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனியில் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வந்தார். இவர் தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்குவதற்கு நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. வானம்பாடி இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முதன்மையானவர் இவர்.இதுவரை 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

Follow Us