AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“2 சீட்டுனு கிண்டல் பண்ணாங்க.. இப்போ அருமை புரியுதா?”.. திமுகவை சீண்டிய திருமாவளவன்?

விசிக எடுக்கப்போகும் முடிவை ஒட்டுமொத்த தமிழகமும், ஊடகங்களும் எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். "சிறுத்தைகள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று தொலைக்காட்சிகளில் கவுண்ட் டவுன் போட்டார்கள். இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கிறது, அரை மணி நேரம் இருக்கிறது, 10 நிமிடம் இருக்கிறது, 5 நிமிடம் இருக்கிறது என அனைவரும் காத்துக்கிடந்தார்கள் என்றார்.

“2 சீட்டுனு கிண்டல் பண்ணாங்க.. இப்போ அருமை புரியுதா?”.. திமுகவை சீண்டிய திருமாவளவன்?
திருமாவளவன்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 01 Jul 2026 08:23 AM IST

சென்னை, ஜூலை 01: தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் மிகத் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, தவெக அரசு அமைந்ததற்கு விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்த சூழலில், விசிக தலைவர் தொல். திருமாவளவன் மேடையில் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆக்ரோஷமாகவும் பேசியுள்ளார். அதன்படி, கூட்டத்தில் பேசிய தொல்.திருமாவளவன், “நான் அடிக்கடி மேடைகளில் சொல்வது போல, எங்களை எவ்வளவுதான் ஓரம் கட்டப் பார்த்தாலும், ஒதுக்கி வைக்கப் பார்த்தாலும், நாங்களே தமிழ்நாட்டு அரசியலின் மையம் என்பதை மீண்டும் நிரூபிப்போம் என்றார்.  மேலும், ‘இரண்டு சீட்டு’ என்று எங்களை கிண்டல் செய்தவர்களுக்கு, இப்போதுதான் அந்த இரண்டு சீட்டுகளின் அருமை என்னவென்று தெரிந்திருக்கும்” என ஆவேசமாகப் பேசினார்.

மேலும் படிக்க: எடப்பாடி எடுத்த தன்னிச்சையான முடிவு… அதிமுகவிலிருந்து விலகுவதற்கான காரணம் இதுதான்… எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிக்கை

விசிகவின் முடிவை எதிர்பார்த்து நின்ற ஊடகங்கள்:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எடுக்கப்போகும் முடிவை ஒட்டுமொத்த தமிழகமும், ஊடகங்களும் எவ்வளவு உன்னிப்பாகக் கவனித்தன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “சிறுத்தைகள் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று தொலைக்காட்சிகளில் கவுண்ட் டவுன் போட்டார்கள். இன்னும் முக்கால் மணி நேரம் இருக்கிறது, அரை மணி நேரம் இருக்கிறது, 10 நிமிடம் இருக்கிறது, 5 நிமிடம் இருக்கிறது என திருமாவளவன் என்ன பேசப்போகிறார் என்று அனைவரும் காத்துக்கிடந்தார்கள். இதை நான் பெருமைக்காகச் சொல்லவில்லை. இந்த இயக்கம் கடந்த 25 ஆண்டுகால தேர்தல் அரசியலில் எத்தகைய அடக்குமுறைகளையும், சூது சூழ்ச்சிகளையும், வஞ்சகங்களையும் எதிர்கொண்டு இந்த ஆற்றல்மிக்க இடத்திற்கு வந்து நிற்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்.

சிறுத்தைகள் இல்லாமல் அரசியல் இயங்காது:

தொடர்ந்து பேசிய அவர், விசிக ஒரு சாதி கட்சி அல்ல என்பதைத் திட்டவட்டமாக மறுத்தார். “ஏதோ சாதி பெயரைச் சொல்லி வந்திருந்தால், சமகாலத்தில் சாதி பெயரைச் சொல்லி அரசியல் தொடங்கிய மற்ற இயக்கங்கள் எல்லாம் வளர்ந்திருக்க வேண்டுமே? அவர்கள் யாராவது இப்போது இந்த களத்தில் நிற்கிறார்களா? நான் ஆணவத்தோடு சொல்லவில்லை, தமிழ்நாடு அரசியலின் நாடி பிடித்துச் சொல்கிறேன், ஜோசியம் சொல்லவில்லை, தீர்மானிக்கும் ஆற்றல் இருப்பதனால் சொல்கிறேன்.. சிறுத்தைகள் இல்லாமல் தமிழ்நாடு அரசியல் இயங்காது” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க: நீங்கள் மட்டும் தான் கேள்வி கேட்பீர்களா? – செய்தியாளருடன் வைகோ கடும் வாக்குவாதம்

தொங்கு சட்டமன்றத்தை முன்பே கணித்தேன்:

தேர்தல் முடிவுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் உருவாகும் என்று கணித்துக் கூறியவன் திருமாவளவன் தான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், “ஆட்சி அமைப்பதற்கு சிலருக்குச் சில தொகுதிகளின் எண்ணிக்கை தேவைப்படும் என்ற நிலை வரும்போது, நான் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால்தான் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடப் போவதாகத் தேர்தலுக்கு முன்பே சொன்னேன். ஆனால், நான் ஏன் போட்டியிடவில்லை என்று என்னிடம் விளக்கம் கேட்பவர்கள் யாரும், ஏன் திருமாவளவனைப் போட்டியிட விடாமல் தடுத்தீர்கள் என்று திமுகவிடம் கேள்வி கேட்கவில்லை” எனத் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

Follow Us