திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மறு சீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூலை 1 : கடந்த 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக தொகுதிகளை வென்று அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். 59 தொகுதிகளில் வென்ற திமுக 2வது இடம் பிடித்து உதயநிதி ஸ்டாலின் எதிர்கட்சி தலைவரானார். திமுகவின் இந்த தோல்விக்கு சமூக வலைதளங்களில் சரியான முறையில் பிரச்சாரம் மேற்கொள்ளகததே இதற்கு முக்கிய காரணம் என பலரும் கருத்து தெரிவித்தனர்.
திமுக மறுசீரமைப்புக்கு ஆலோசனை குழு அமைப்பு
அதன் ஒரு பகுதியாக திமுகவின் தோல்விக்கு காரணம் குறித்து தொண்டர்களின் கருத்துக் கேட்பதற்காக குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழு தொகுதி வாரியாக சென்று தொண்டர்களின் கருத்துக்களை கேட்டு மு.க.ஸ்டாலினுக்கு அறிக்கை சமர்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திமுகவில் மறுசீரமைப்பு செய்யவிருப்பதாக கூறி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு குழு ஒன்றை அறிவித்திருக்கிறார்.




இதையும் படிக்க : தவெக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்… இடதுசாரிகள் ஷாக் அறிவிப்பு.. இருந்தாலும்…!
திமுகவின் கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை ஒரே சீரான மறுசீரமைப்பு மற்றும் மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 10 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவு வெளியான உடனேயே கட்சித் தொண்டர்களின் கருத்துகளை கேட்க முடிவு செய்து, அதற்காக 19 குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த ஆய்வுக்குழுவில் 38 பேர் இடம்பெற்றிருந்தனர்.
மு.க.ஸ்டாலினின் பதிவு
உடன்பிறப்புகளே… உங்களின் குரல்களைக் கேட்டேன்; ஆய்வறிக்கைகளைப் படித்தேன். கழகத்தின் அடுத்த நூறாண்டுக்கான பயணத்தைத் திட்டமிட மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு அமைக்கிறேன்.#UdanpirapinKural pic.twitter.com/NZAoTrUubX
— M.K.Stalin (@mkstalin) June 30, 2026
தமிழகம் முழுவதும் பயணித்த இவர்கள், ஆராய்ந்து அறிக்கைகளை தயாரித்து என்னிடம் வழங்கியுள்ளனர். இவர்கள் அனைவருமே திமுகவின் மறுசீரமைப்பையே வலியுறுத்தியுள்ளனர். அதனடிப்படையில் கட்சிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் மறுசீரமைப்புக்கு புதிய ஆலோசனை குழு அமைக்கப்படுகிறது. இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கீதா ஜீவன், அர.சக்கரபாணி, எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.பி.க்கள் எம்.எம்.அப்துல்லா, ச.முரசொலி, முன்னாள் எம்எல்ஏக்கள் தமிழரசி ரவிக்குமார், இ.பரந்தாமன், எழிலன் மற்றும் எஸ்.கே.பி.கருணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதையும் படிக்க : போக்குவரத்து துறையில் அரசு வேலை மோசடி.. குற்றப்பிரிவு போலீஸ் விசாரணையில் மாஜி அமைச்சர் சிவசங்கர்!
இந்த குழுவானது மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மறுவரையறை, சார்பு அணிகளின் மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் பணிக்குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து விரிவாக ஆராயும். மேலும், தேர்தல் பணிகளை தொய்வின்றி செய்வதற்கான நிரந்தர அமைப்பு மற்றும் தலைமைக்கான ஆலோசனைகளை வழங்கும் ஒரு அமைப்பை உருவாக்குவது குறித்தும் தனது பரிந்துரைகளை ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் என்னிடம் வழங்கும். அதன்பின், திமுகவின் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.