ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு – முதல்வர் விஜய் அறிவிப்பு
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்படுவதாக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவித்தார். இதன் மூலம் ரூ.38 ஆக உள்ள ஆவின் கொள்முதல்விலை தற்போது ரூ.41 ஆக உயர்த்தப்படவுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு ரூ.360 கோடியும் கூடுதல் செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 19 : ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்படுவதாக சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். தற்போது ரூ.38 ஆக உள்ள ஆவின் கொள்முதல்விலை தற்போது ரூ.41 ஆக உயர்த்தப்படவுள்ளது. இந்த விலை உயர்வால் அரசுக்கு மாதந்தோறும் ரூ.30 கோடியும், ஆண்டுதோறும் ரூ.360 கோடியும் கூடுதல் செலவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு
மேலும்,கூட்டுறவு சங்கம் மூலம் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்படுவதுடன், அரசு ஊக்கத்தொகையும் ரூ.3ல் இருந்து ரூ.5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பான அறிவிப்பின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள 3 லட்சத்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் திற்கும் மேற்பட்ட நேரடியாகப் பயனடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.




இதையும் படிக்க : வேளாங்கண்ணி மாதா பேராலயத் திருவிழா: திருவனந்தபுரம் – வேளாங்கண்ணி இடையே வாராந்திர சிறப்பு ரயில்!
வெளியான அறிவிப்பு
பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ 38-ல் இருந்து ரூ 41 ஆக உயர்வு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு#CMJosephVijay | #TNDIPR | #TNBudget2026_27 |@TVKVijayHQ | @imrajmohan | pic.twitter.com/RgRqXnXPsa
— TN DIPR (@TNDIPRNEWS) August 19, 2026
அதனைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்பையும் முதல்வர் விஜய் வெளியிட்டார். அதன்படி பெரம்பூரில் ரூ.300 கோடி மதிப்பில் 400 படுக்கைகளுடன் உலகத் தரத்திலான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், திருநங்கைகளுக்கான சிறப்பு மருத்துவச் சேவைகள் பல மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர் அறிவித்தார். அப்போது பேசிய அவர் ஒரு உயிரின் மதிப்பை அவரது வருமானம் தீர்மானிக்கக்கூடாது; வசதி படைத்தவர், வசதி குறைவானவர் என்ற நிலை மருத்துவத் துறையில் இருக்கக்கூடாது என்றார்.
இதையும் படிக்க : தென் மாநில முதல்வர்கள் மாநாடு – அமித் ஷாவை சந்திக்கும் முதல்வர் விஜய்
சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும். வாகன ஓட்டுநர், எரிபொருள், வாகன பராமரிப்புக்கு மாதந்தோறும் ரூ.75,000 வாகனப்படியாக வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். மேலும் பேசிய அவர், மக்களிடம் எப்போது பேசணும்.. என்ன பேசணும்.. எப்படி பேசணும்… எல்லாம் பேசிவிட்டுத்தான்… அன்பா, ஆசையா எங்க எல்லாரையும் கொண்டு வந்து இங்க உட்கார வைத்துள்ளார்கள். நான் பேசுவேன்.. பேசக்கூடாது என்றெல்லாம் ஒன்றுமில்லை. இடைத்தேர்தலிலாவது சில பேருக்கு நல்லது நடக்கணும்ல என்றார். முதல்வர் பேசுவதில்லை என எதிர்கட்சியினர் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில் அவர் இந்த கருத்தை முன்வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.