தோனிக்கு சொந்தமான கஃபேயில் முதல்வர் விஜய் – ராகுல் காந்தி – சர்ப்ரைஸ் விசிட்டால் மக்கள் இன்ப அதிர்ச்சி
CM Vijay Rahul Gandhi Cafe Visit : தமிழக முதல்வர் விஜய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு சனிக்கிழமை தனது நீலாங்கரை இல்லத்தில் விருந்தளித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு சொந்தமான கஃபேயில் இருவரும் உணவருந்தினர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக். 10: தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை தீவுத்திடலில் மாணவர்களின் குரல் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அக்டோபர் 10, 2026 தமிழகம் வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் விஜய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு சனிக்கிழமை தனது நீலாங்கரை இல்லத்தில் விருந்தளித்தார். அதனைத் தொடர்ந்து பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனிக்கு சொந்தமான கஃபேயில் இருவரும் உணவருந்தினர்.
தோனிக்கு சொந்தமான கஃபேயில் முதல்வர் விஜய் – ராகுல் காந்தி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தீவுத்திடலில் நடைபெறும் மாணவர்களின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல் காந்தி சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரை வரவேற்றனர். காங்கிரஸ் கட்சியின் இளைஞர்களுக்கான இது என்பதும் தொடர்ந்து 6வது முறையாக நடைபெறுவதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : சோலார் பேனல் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம் – விண்ணப்பிப்பது எப்படி?




விமான நிலையத்திலிருந்து நேரடியாக நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய்யின் இல்லத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, அவருடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தியைப் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற முதல்வர் விஜய் இந்தியா கூட்டணி குறித்து விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து முதல்வர் விஜய் தனது காரிலேயே ராகுல் காந்தியை பாலவாக்கத்தில் உள்ள ஒரு கஃபேவுக்கு அழைத்துச் சென்றார். அங்கு முதல் தளத்தில் அமர்ந்து பேசியனர். இரு பெரும் தலைவர்களின் திடீர் வருகையால் கஃபேயில் பணியாற்றிய ஊழியர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி ஏற்பட்டது. இருவரது வருகை குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த ஊழியர்கள் ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய்யின் வருகை குறித்து தங்களுக்கு தெரியாது என்றும் இருவரும் டிராமிசு ஜார், கப்புச்சினோ, அமெரிக்கானோ ஐஸ்டு காபி ஆகியவற்றை சாப்பிட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : சென்னை மக்களே நோட் பண்ணுங்க… பல்வேறு இடங்களில் நாளை போக்குவரத்து மாற்றம்.. முழு விவரம்!
கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டிய அமைதியான பகுதியில் இந்த கஃபே அமைந்துள்ளது. இருவரும் சென்ற உணவகம் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனிக்குச் சொந்தமானது என சில ஊடகங்களில் தகவல் வெளியானது. எனினும், அது தனியார் உரிமையாளர்களுக்குச் சொந்தமான ‘பாஸ்க்’ கஃபே என வேறு சில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அப்போது இருவருடன் கஃபே ஊழியர்களும் பொதுமக்களும் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். கஃபேவிலிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி, தாஜ் கோரமண்டல் ஹோட்டலுக்குச் சென்ற அவர், அக்டோபர் 10, 2026 இன்று மாலையில் தீவுத்திடலில் நடைபெறும் மாணவர் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.