AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் – டோக்கன் எப்படி பெறுவது?

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் வசிக்கும் மூத்த குடிமகன்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் கீழ் ஜூலை 2026 முதல் டிசம்பர் 2026 ஆகிய 6 மாதங்கள் பயன்படுத்தக் கூடிய கட்டணமில்லா பயண டோக்கன்கள் வழங்கப்பவுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் – டோக்கன் எப்படி பெறுவது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 Jun 2026 18:03 PM IST

சென்னை, ஜூன் 18 : சென்னையை சேர்ந்த மூத்த குடிமக்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தின் கீழ் 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன. இந்த டோக்கன்கள் ஜூலை 2026 முதல் டிசம்பர் 2026 ஆகிய 6 மாதங்களுக்கு செல்லுபடியாகும். இதற்கான டோக்கன்கள் ஜூன் 21, 2026 முதல் ஜூலை 31 வரை சென்னை முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் மூலம் வழங்கப்டவுள்ளன.

மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் வசிக்கும் மூத்த குடிமகன்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் கீழ் ஜூலை 2026 முதல் டிசம்பர் 2026 ஆகிய 6 மாதங்கள் பயன்படுத்தக் கூடிய கட்டணமில்லா பயண டோக்கன்கள் வழங்கப்பவுள்ளது.

இதையும் படிக்க : குற்றாலம் – மேலகரம் சாலையில் திடீர் கடைகளால் போக்குவரத்து நெரிசல்

ஒரு மாதத்துக்கு 10 டோக்கன்கள் வீதம் மொத்தம் 6 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது. இதனுடன் ஏற்கனவே உள்ள பயனாளர்களின் அடையாள அட்டையை புதுப்பித்தல் மற்றும் புதிய பயனாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பணிகள் அனைத்தும் சென்னையில் மாநகராட்சி போக்குவரத்துக்கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 39 மையங்களில் வரும் ஜூன் 21, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை நடைபெறவுள்ளது. இதற்காக விடுமுறை நாட்கள் உட்பட தினமும் காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை இந்த சேவையை மக்கள் பெறலாம். இதற்காக அடையாறு, திருவான்மியூர், தி.நகர், சைதாப்பேட்டை, அய்யப்பன்தாங்கல், குரோம்பேட்டை, வடபழனி, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, அயனாவரம், எண்ணூர், மாதவரம், தாம்பரம், பெரம்பூர், செம்மஞ்சேரி, கிளாம்பாக்கம், குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த மையங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு என்ன ஆவணங்கள் தேவை?

கட்டணமில்லா பேருந்து சேவைக்கான டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டையை பெற விரும்புகிறவர்கள்,

  • குடும்ப அட்டை (இருப்பிட சான்று)
  • ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்விச் சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டை (வயது சான்று)
  • 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

இதையும் படிக்க : முதல்வர் விஜய் பிறந்தநாள்.. வண்டலூர் உயிரியல் பூங்கா உட்பட 3 பூங்காவில் மக்களுக்கு 2 நாள் இலவச அனுமதி.. எப்போது?

இந்த ஆவணங்களை சமர்பித்து கட்டணமில்லா பேருந்து பய டோக்கன்களை பெற்றுக்கொள்ளலாம்.  அரசு அலுவலகங்களுக்கு அல்லது மருத்துவமனைகளுக்கு செல்லும் மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் அவர்களது மாத செலவுகள் பெருமளவில் குறையும் என்பதால் மக்கள் பலர் இந்த திட்டத்தை வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையில் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்த திட்டத்தை விரிவு செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் மக்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Follow Us