‘12,000 தனியார் பள்ளிகள்’.. தமிழகத்தில் வருகிறது புதிய நடைமுறை.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!!
கல்வித்துறையில் இனி புரோக்கர்களுக்கு (இடைத்தரகர்களுக்கு) எவ்வித இடமும் கிடையாது" என்று அமைச்சர் ராஜ்மோகன் மிக அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். பள்ளிகளுக்கான அங்கீகாரங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் பணிகள் அனைத்தும் 100 விழுக்காடு ஆன்லைன் மயமாக்கப்படுவதால், இனி நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ அணுக வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
சென்னை, ஜுன் 18: தமிழகத்தில் இயங்கி வரும் 12,000 தனியார் பள்ளிகளுக்கான அனைத்து வகையான சான்றிதழ்களும் மற்றும் ஆணைகளும் இனி ஆன்லைன் முறையிலேயே வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்திலிருந்து அமலுக்கு வர உள்ளது. சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 848 தனியார் பள்ளிகளுக்குத் தொடர் அங்கீகார ஆணைகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். அப்போது மேடையில் பேசிய அமைச்சர் மற்றும் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட முக்கிய விபரங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
மேலும் படிக்க: சர்வதேச தரத்தில் சென்னைக்கு 3ஆவது மாஸ்டர் பிளான் திட்டம்.. அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி அறிவுறுத்தல்!!
புரோக்கர்களுக்கு இடமில்லை – அமைச்சர் அதிரடி:
கல்வித்துறையில் இனி புரோக்கர்களுக்கு (இடைத்தரகர்களுக்கு) எவ்வித இடமும் கிடையாது” என்று அமைச்சர் ராஜ்மோகன் மிக அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். பள்ளிகளுக்கான அங்கீகாரங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கும் பணிகள் அனைத்தும் 100 விழுக்காடு ஆன்லைன் மயமாக்கப்படுவதால், இனி நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ அணுக வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் தெரிவித்தார்.
எந்தெந்தச் சான்றிதழ்கள் ஆன்லைனில் கிடைக்கும்?
தமிழகத்தில் உள்ள மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ (CBSE) உள்ளிட்ட அனைத்து வகையான 12,000 தனியார் பள்ளிகளும் பின்வரும் சேவைகளை இனி இணையதளம் வழியாகவே பெற முடியும். புதிதாகப் பள்ளிகளைத் தொடங்குவதற்கான அனுமதி மற்றும் தடையின்மை சான்றிதழ்கள், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெற வேண்டிய தொடர் அங்கீகார ஆணைகள், பள்ளி மேம்பாட்டிற்கான கட்டட உறுதிச்சான்றிதழ்கள் மற்றும் பிற சான்றிதழ்கள், பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் அல்லது புதிய வகுப்புகளைத் தொடங்குவதற்கான அனுமதிகள் உள்ளிட்டவற்றை ஆன்லைன் மூலமே பெறலாம்.
‘எமிஸ்’ இணையதளத்தில் புதிய வசதி:
தற்போது பள்ளி கல்வித்துறையில் செயல்பாட்டில் உள்ள புகழ்பெற்ற ‘எமிஸ்’ (EMIS) இணையதளத்தின் மூலமாகவே, தனியார் பள்ளிகள் இந்தச் சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளும் வகையில் தனியாக புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
நேரடி ஆய்வுகளும் தொடரும்:
சான்றிதழ்கள் ஆன்லைன் முறையில் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டாலும், ஆன்லைன் தரவுகளில் ஏதேனும் சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டால், அதிகாரிகள் நேரடியாகப் பள்ளிகளுக்குச் சென்று ‘பிசிக்கலாக’ ஆய்வு செய்வார்கள் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்யின் ஆடை விளம்பரமே செய்தியாக வருகிறது… மு. க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
இணையதளம் வழியாக எவ்வாறு விண்ணப்பிப்பது, பள்ளி நிர்வாகங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்த முழுமையான வழிகாட்டுதல்கள் அனைத்தும் வரும் ஜூலை முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனத் தனியார் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.