AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொளுத்தும் வெயில் ஒருபக்கம்.. 13 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வானிலை ரிப்போர்ட் இதோ..

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கொளுத்தும் வெயில் ஒருபக்கம்.. 13 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. வானிலை ரிப்போர்ட் இதோ..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Jun 2026 06:25 AM IST

ஜூன் 18, 2026: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதில் அதிகபட்சமாக வேலூரில் 40.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருத்தணியில் 40 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 40.1 டிகிரி செல்சியஸ், சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

மேலும், கரூர் பரமத்தியில் 38 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 37.8 டிகிரி செல்சியஸ், மதுரையில் 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் வரக்கூடிய நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஒரு சில இடங்களில் வெப்பநிலை சற்று அதிகமாக பதிவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் அதிகமாக இருந்தாலும், பல்வேறு பகுதிகளில் மழையும் தொடர்ந்து பதிவாகி வருகிறது. அந்த வகையில், ஜூன் 18ஆம் தேதியான இன்று நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: மக்கள் நலன் காக்க ஒன்றுதிரளும் இடதுசாரிகள்.. மாபெரும் பேரணி – பொதுக்கூட்டம்.. கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அதேபோல், ஜூன் 19ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 23ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு:

அதனைத் தொடர்ந்து, ஜூன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 22 மற்றும் 23ஆம் தேதிகளில் ஒரு சில பகுதிகளில் மட்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருந்து வரும் சூழலில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தாலும், மறுபுறம் வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக அதிகரித்த வண்ணமே உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Follow Us