AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சபரிவர்மன் சக கைதிகளால் அடித்தே கொலை… போலீசாரின் தூண்டுதலால் நடந்த சம்பவம் – சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையில் தகவல்

Sabarivarman Death Case : நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் சிறை வார்டன்கள் சக கைதிகளைப் பயன்படுத்தி அவரைக் கொடூரமாகத் தாக்கியதே மரணத்துக்குக் காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.

சபரிவர்மன் சக கைதிகளால் அடித்தே கொலை… போலீசாரின் தூண்டுதலால் நடந்த சம்பவம்  – சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கையில் தகவல்
சபரிவர்மன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Oct 2026 12:10 PM IST

சென்னை, அக்டோபர் 14 : நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த மாற்றுத்திறனாளி சபரிவர்மன், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் சிறை வார்டன்கள் சக கைதிகளைப் பயன்படுத்தி அவரைக் கொடூரமாகத் தாக்கியதே மரணத்துக்குக் காரணம் என அதில் கூறப்பட்டுள்ளது.

சபரிவர்மன் சக கைதிகளால் அடித்தே கொலை… அதிர்ச்சி தகவல்

இது தொடர்பாக சிபிசிஐடி குற்றப்பத்திரிகையின்படி, சிறையில் இருந்த சக கைதிகளைக் கொண்டு சிறை வார்டன்கள் சபரிவர்மனைத் தாக்கியுள்ளனர். அவரது பையில் இருந்த அவருடைய லுங்கியையே பயன்படுத்தி அவரைக் கட்டி வைத்து, கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்குதலுக்குப் பிறகும் கைலியால் கட்டப்பட்ட கட்டை அவர் அவிழ்க்கமால் இருந்ததாக கூறப்படுகிறது. கட்டப்பட்டதன் காரணமாக நீண்ட நேரம் அசையாமல் தரையிலேயே கிடந்த சபரிவர்மனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு அன்று நள்ளிரவிலேயே அவர் உயிரிழந்ததாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கோயில்களில் செல்போன் தடையில்லை: ‘சுவிட்ச் ஆஃப்’ செய்து எடுத்துச் செல்லலாம்

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகே ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன். மாற்றுத்திறனாளியான இவர் தனது வீட்டின் அருகே பெட்டிக்கடை நடத்தி வந்தார். அவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் வைத்திருந்ததாகக் கூறி, தென்தாமரைகுளம் போலீசார் அவரைக் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின்பேரில் நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த ஜூலை 13, 2026 அன்று அவர் சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தை முன்னிட்டு சபரிவர்மன் மரணத்துக்கு நீதி கேட்டு, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 8 கைதிகளும், 3 சிறை அதிகாரிகளும் என மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். சிறைச்சாலை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட கைதிகளில் அரவிந்த், அஜய், ஜெகன் ஆகியோரும் அடங்குவர். கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, நாங்குநேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் காவல்துறை மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்ததால், விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி ராஜ்குமார் நவராஜ் தலைமையிலான குழுவினர் இந்த வழக்கை விசாரித்தனர். சுமார் 3 மாத கால விசாரணைக்குப் பிறகு, தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : விண்ணை முட்டும் அரசி விலை.. அரசு எடுத்த அதிரடி முடிவு.. கூட்டுறவு அங்காடிகளில் ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்க திட்டம்!

சபரிவர்மன் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்த நிலையில், சிறைக்குள் நடந்தது என்ன என்பது குறித்த விவரங்கள் இந்தக் குற்றப்பத்திரிகை மூலம் வெளிவந்துள்ளன. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.  சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த ஒருவர் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Follow Us