AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கோயில்களில் செல்போன் தடையில்லை: ‘சுவிட்ச் ஆஃப்’ செய்து எடுத்துச் செல்லலாம்

Temple Smartphone Ban Rollback : கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இந்து சமய அறநிலையத் துறை தளர்த்தியுள்ளது. இனி பக்தர்கள் தங்கள் செல்போன்களை 'சுவிட்ச் ஆஃப்' செய்து விட்டு கோயிலுக்குள் எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் செல்போன் தடையில்லை: ‘சுவிட்ச் ஆஃப்’ செய்து எடுத்துச் செல்லலாம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Oct 2026 10:11 AM IST

சென்னை, அக்டோபர் 14 : கோயில்களுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை இந்து சமய அறநிலையத் துறை தளர்த்தியுள்ளது. இனி பக்தர்கள் தங்கள் செல்போன்களை ‘சுவிட்ச் ஆஃப்’ செய்து கோயிலுக்குள் எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கோயிலுக்குள் புகைப்படம், வீடியோ எடுப்பதற்கான தடை தொடரும் என அறநிலையத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.

52 கோயில்களில் விதிக்கப்பட்ட தடை

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, அறநிலையத் துறையில் பல்வேறு புதிய நடைமுறைகள் கொண்டுவரப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் 1, 2026 முதல் மாநிலத்தின் முக்கியமான 52 கோயில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது.

இதையும் படிக்க : நந்தம்பாக்கம் – ஆலந்தூர், வடபழனி – பனகல்பார்க் மெட்ரோ – எப்போது தொடக்கம்?

அதன் படி தமிழகத்தின் முக்கிய கோயில்களான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில், மதுரை அழகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
தடைக்கான காரணம்

வழிபாட்டுத் தலங்களின் புனிதத்தையும் அமைதியான சூழலையும் காக்கவும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. கோயில்களில் சுவாமி சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோ பதிவு செய்வது போன்ற செயல்களைத் தடுப்பது மற்றும் கோயில்களில் ரீல்ஸ் எடுப்பது ஆகிய செயல்களை தடுப்பதே இதன் நோக்கம் என அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விளக்கமளித்திருந்தார்.

இதனையடுத்து கோயில் வளாகங்களில் செல்போன் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்ட நலையில், பக்தர்கள் தங்கள் செல்போன்களை ரூ.5 கட்டணம் செலுத்தி ஒப்படைக்க வேண்டும். தரிசனம் முடிந்து மீண்டும் செல்போனைப் பெறுவதற்கு இன்னொரு முறை என பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. செல்போனை ஒப்படைப்பதற்காக ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருக்க வேண்டியிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக முதியவர்களும் குழந்தைகளுடன் வந்தவர்களும் கடும் சிரமத்துக்குள்ளாயினர். இதனால், தடையை நீக்க வேண்டும் எனப் பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையும் படிக்க : நண்பர்கள் பெயரில் போலி ஆவணம்.. வங்கியில் போலி நகை.. வேலூரில் ரூ.1.7 கோடி அடித்த நகை மதிப்பீட்டாளர்கள்!

பாதுகாப்பு மையங்களில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்கள் குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வந்தனர். அதன் தொடர்ச்சியாக, பக்தர்களின் வசதிக்காக செல்போன் கட்டுப்பாடுகளில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. புதிய நடைமுறைப்படி, பக்தர்கள் செல்போன்களைக் கோயிலுக்குள் எடுத்துச் செல்லலாம். ஆனால் உள்ளே நுழையும் முன் அவற்றை ‘சுவிட்ச் ஆஃப்’ செய்துவிட வேண்டும்.

செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டாலும், கோயிலுக்குள் சிலைகள், பூஜைகளைப் புகைப்படம், வீடியோ எடுப்பது, செல்ஃபி எடுப்பது, ரீல்ஸ் பதிவு செய்வது, சமூக வலைதளங்களுக்காகப் பதிவுகளை உருவாக்குவது ஆகியவற்றுக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். இந்த விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்து சமய அறநிலையத் துறை எச்சரித்துள்ளது.

Follow Us