வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி மாயம்…. 3 நாட்களாக தேடும் போலீஸ் – செஞ்சி அருகே பரபரப்பு
Villupuram Girl Missing Case : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, இரவில் வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென மாயமானார். சிறுமியைக் கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தொடர்ந்து 3வது நாளாகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், அக்டோபர் 14 : விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, இரவில் வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி திடீரென மாயமானார். சிறுமியைக் கண்டுபிடிக்கும் பணியில் தனிப்படை போலீசார் தொடர்ந்து 3வது நாளாகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி நடுப்பட்டு சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல். விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கு 7 வயதில் மகள் இருக்கிறார். அவர் ஆலம்பூண்டியில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 11, 2026 அன்று0 இரவு , சிறுமி வழக்கம்போல் வீட்டில் பெற்றோருடன் உறங்கச் சென்றுள்ளார்.
இதையும் படிக்க : காஞ்சிபுரத்தில் இந்தியாவின் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையம் – திறந்து வைக்கும் முதல்வர் விஜய்




அன்றிரவு காற்றோட்டத்துக்காக வீட்டின் பின்பக்கக் கதவைப் பெற்றோர் திறந்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் மறுநாள் காலை சுமார் 6 மணிக்குக் கண்விழித்த பெற்றோர், அருகில் உறங்கிக் கொண்டிருந்த மகளைக் காணாததால் அதிர்ச்சியடைந்தனர். உறவினர்கள், அக்கம்பக்கத்தினருடன் சேர்ந்து கிராமம் முழுவதும் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.
தனிப்படைகள் அமைப்பு
இதையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் பணி முடுக்கிவிடப்பட்டது. கிராமம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்கவிட்டு, அவற்றில் பதிவான காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமி மாயமாகி மூன்று நாள்கள் ஆகியும் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காததால், குடும்பத்தினரும் கிராம மக்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சிறுமி எப்படிக் காணாமல் போனார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
இதனை போல கடந்த 2026 மே மாதம் கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2026 மே 21 அன்று தேதி தம்பியுடன், சிறுமி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுமி மாயமானார். இது தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கண்ணம்பாளையம் குளம் அருகே தென்னந்தோப்பில் சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க : ரயில்களில் ஹெட்போன் இல்லாமல் பாடல் கேட்டால் அவ்வளவுதான்.. 6 மாதம் கம்பி எண்ணனும்.. ரயில்வே அதிரடி அறிவிப்பு!
இதையடுத்து பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொலை செய்ததாக கூறி, கார்த்தி என்பவரை அப்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் பதுங்கியிருந்த நிலையில் கைது செய்தனர். அவருக்கு உதவிய அவரது நண்பர் மோகனும் கைது செய்யப்பட்டார். சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து, கண்ணம்பாளையம் குளம் அருகே உள்ள தென்னை தோட்டத்தில் வைத்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதில் அவருக்கு உடந்தையாக அவரது நண்பர் மோகன் (30) இருந்துள்ளார். அவர் மீது குற்றத்தை மறைத்து சதியில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.