AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ போட்டி – அண்ணாமலை அறிவிப்பு

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு களமிறங்கவுள்ளதாக அதன் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு அக்டோபர் 2, 2026, சென்னை ஆழ்வார்பேட்டையில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் காமராஜர் விருது வழங்கும் விழாவில் இதனை அவர் அறிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ போட்டி – அண்ணாமலை அறிவிப்பு
அண்ணாமலை
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Oct 2026 08:57 AM IST

சென்னை, அக்டோபர் 3 : வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் வீ த லீடர்ஸ் அமைப்பு களமிறங்கும் என்றும், அதில் பெண் வேட்பாளர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதன் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு அக்டோபர் 2, 2026, சென்னை ஆழ்வார்பேட்டையில் வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் காமராஜர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

உள்ளாட்சித் தேர்தலில் ‘வீ த லீடர்ஸ்’ போட்டி

விழாவில் பேசிய அண்ணாமலை, இது அரசு வழங்கும் விருது அல்ல என்றும், இன்னும் பரவலாக அறியப்படாத திறமையாளர்களை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்துவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்தார். மேலும் இனி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 அன்று இந்த விருது வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும் பேசிய அவர், காந்தியடிகள் பிறந்த அதே நாளில்தான் காமராஜர் மறைந்தார் மூடிக் கிடந்த 8,000 பள்ளிகளைத் திறந்ததோடு 16,000 புதிய பள்ளிகளையும் தொடங்கியவர் காமராஜர். பதவியிலிருந்து விலகும்போது தமிழகத்துக்கு 36,000 பள்ளிகளை விட்டுச் சென்றவர், கட்டாயக் கல்வியைக் கொண்டு வந்தவர். அக்டோபர் 15 அன்று அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பயிற்சி முகாம் தொடங்கப்படும் என்று பேசினார்.

இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: நீலகிரி, கோவையில் 3 நாட்கள் கனமழை: அக். 4ல் தேனி, திண்டுக்கல்லுக்கு மஞ்சள் அலர்ட் – வானிலை மையம் தகவல்

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ வழக்குகள் 2020-ல் 2,821 ஆக இருந்து 2024-ல் 21,639 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் சராசரியாக 11.77 போக்சோ வழக்குகள் பதிவாகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 1,942 பாலியல் வன்கொடுமை வழக்குகள், 1,075 பாலியல் தொல்லை வழக்குகள், 1,427 கடத்தல் வழக்குகள் பதிவாகியுள்ளது என்றார்.

மேலும், அமைச்சரவையில் பெண்களின் எண்ணிக்கையை ஒன்றிரண்டிலிருந்து எட்டாக உயர்த்தியதற்காக, கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி தவெக அரசைப் பாராட்ட வேண்டும். தங்கள் ஆட்சி அமைந்தால் 35 பேர் கொண்ட அமைச்சரவையில் 18 இடங்களைப் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்பதே இலக்கு என்றார். ஆட்களைத் திரட்டி உறுப்பினர் எண்ணிக்கையைக் காட்டும் போட்டியில் தங்கள் அமைப்பு இறங்கவில்லை வீ த லீடர்ஸ் அரசியல் அமைப்பாக மாறும்போது, பிரச்சாரமே இல்லாமல் தேர்தலைச் சந்திக்கும் நிலை வர வேண்டும், செய்த பணிகளின் அடிப்படையிலேயே வாக்குகள் தானாக வர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிக்க : தமிழகத்தில் எஸ்.ஐ. காலிப்பணியிடங்கள் எவ்வளவு? அறிக்கை கேட்கும் டிஜிபி.. விரைவில் SI தேர்வு?

‘முதலமைச்சரோ அமைச்சர்களோ மட்டும் மாற்றத்தைக் கொண்டு வர முடியாது , தமிழகத்தின் 12,525 ஊராட்சித் தலைவர்கள் மாறினால்தான் உண்மையான மாற்றம் நிகழும். நாம் தேர்தலுக்குச் சென்றால் மைக் பிடித்துக் கொண்டு செல்லும் வேலையே இருக்கக் கூடாது. வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு கடைசி நாள் மக்களை சென்று பார்க்க வேண்டும் மக்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை சொல்ல வேண்டும். மக்கள் கையில் அதிகாரத்தை கொடுத்து விட்டு நமது வேட்பாளர்கள் களத்தில் இருக்க வேண்டும். அந்த அரசியலை நோக்கி நாம் செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.

Follow Us