AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அண்ணாமலை வெளியேறிய பின் அமித்ஷா நடத்திய ஆலோசனை.. தமிழக பாஜக தலைவர்களிடம் சொன்ன ‘பாசிட்டிவ்’ வார்த்தை..

சட்டமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த தோல்வி என்பது ஒரு தோல்வியே இல்லை. நாம் இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வலுவாகத்தான் இருக்கிறோம். பாஜக நீங்கள் நினைப்பது போலத் தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை; மாறாக அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது," என்று பேசி நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அண்ணாமலை வெளியேறிய பின் அமித்ஷா நடத்திய ஆலோசனை.. தமிழக பாஜக தலைவர்களிடம் சொன்ன ‘பாசிட்டிவ்’ வார்த்தை..
பாஜக மூத்த தலைவர் அமித்ஷா ஆலோசனை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Jun 2026 08:05 AM IST

டெல்லி, ஜுன் 13: தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை வெளியேறியுள்ள சூழலிலும், நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு மத்தியிலும், டெல்லியில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் ஆகியோர் நேற்று முன்தினம் அவசர ஆலோசனைக்கூட்டம் ஒன்றை நடத்தினர். அண்ணாமலையின் திடீர் விலகலால் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களைத் தீர்க்கவும், நிர்வாகிகளுக்குப் புதிய உத்வேகம் அளிக்கவும் இந்த முக்கிய கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதில், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை செளந்தரராஜன், வானதி சீனிவாசன், எச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க: கர்நாடகா சென்ற முதல்வர் விஜய்.. கறுப்புக்கொடி காட்ட முயன்ற கன்னட அமைப்பினர்.. காரணம் தெரியுமா?..

‘இது ஒரு தோல்வியே அல்ல’ அமித்ஷா உத்வேகம்:

இந்த கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக நிர்வாகிகளிடம் மிகவும் நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நமக்குக் கிடைத்த தோல்வி என்பது ஒரு தோல்வியே இல்லை. நாம் இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வலுவாகத்தான் இருக்கிறோம். பாஜக நீங்கள் நினைப்பது போலத் தனது வாக்கு வங்கியை இழக்கவில்லை; மாறாக அதை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது,” என்று பேசி நிர்வாகிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பாஜக வாக்கு வங்கி கணக்கு என்ன?

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், வாக்கு வங்கி அப்படியே இருக்கிறது என அமித்ஷா கூறுவதற்குக் குறிப்பிட்ட ஒரு அரசியல் கணக்கை அவர் முன்வைத்துள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி 23 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. அதன் கீழ் வரும் சுமார் 80-க்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் கட்சியின் வாக்கு சதவீதம் 11 முதல் 12 விழுக்காடாக இருந்தது.

ஆனால் தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகக் 27 தொகுதிகளில் போட்டியிட்டது. எனவே ஒட்டுமொத்த தமிழக அளவிலான வாக்கு சதவீதம் (3.66%) குறைவாகத் தெரிந்தாலும், நாம் போட்டியிட்ட தொகுதிகளின் அடிப்படையில் பார்த்தால் வாக்கு வங்கி எங்கும் சிதறவில்லை, அப்படியேதான் உள்ளது என்பதை அமித்ஷா சுட்டிக்காட்டியுள்ளார்.

துவண்டு விடாதீர்கள்.. பணியைத் தொடருங்கள்:

“தேர்தல் முடிவுகளைக் கண்டு யாரும் தொய்வடைந்து விடக் கூடாது. அண்ணாமலை சென்றுவிட்டாரே என்று கவலைப்படாமல், எனர்ஜெடிக்காக அடுத்தடுத்த தேர்தல் பணிகளை நோக்கி நீங்கள் நகர வேண்டும். டெல்லியில் இருந்து உங்களுக்கு முழுமையான ஆதரவு எப்போதும் இருக்கும். பயப்படாமல் களத்திற்குச் செல்லுங்கள். தாமரை மலர்ந்திருப்பதைப் போல மலர்ந்த முகத்துடன் தமிழகத்தில் பாஜாகவை வளர்ப்பதற்கான தேர்தல் அரசியலை முன்னெடுங்கள்,” என அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிக்க : “திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறது ‘சோபா மாடல்’ அரசு!”.. உதயநிதி சரமாரி விமர்சனம்!!

அண்ணாமலையின் வெளியேற்றத்திற்குப் பிறகு தமிழக பாஜாகவின் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், “அவர் போனால் போயிட்டுப் போறார், துவண்டு விடாமல் உங்கள் வேலையைப் பாருங்கள்” என அமித்ஷா டெல்லியில் இருந்து பாஜக தலைவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டியிருப்பது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us